Monday, November 3, 2014

மொழி அறிவோம்

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-தொட்டால்-சொல்-மலரும்/article6545669.ece

Friday, October 10, 2014

முதல் உதவி...

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய
வேண்டிய முதல்
உதவி சிகிச்சை முறை

எதைச்செய்தாலும் உரிய நேரத்தில்,
முதலில் செய்ய வேண்டும் என்பார்கள்.
உதவியும் அப்படித்தான். முதலில்
செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும்.
எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம்
பெற்றுள்ளது. வாய்கிழிய
பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல்
உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல
திணறி போவார்கள்.
அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு,
என்ன முதல் உதவி செய்ய வேண்டும்
என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம்
இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-
உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நீங்கள் தெரிந்து கொள்ள
சில முதல் உதவி தகவல்கள்...

ஆஸ்த்துமா:-
கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம்
விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல்
வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம்
கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-
நீல நிறமாதல்.

சிகிச்சை:-
சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின்
மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார
வைக்கவும். கொஞ்சம் முன்பாக
சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால்
மேசை மீது கைகளை ஊன்றி உட்கார
வைக்கவும். அவரிடம் உறிஞ்சும்
மருந்து இருந்தால்
ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-
வாயில் வைத்த 3 அல்லது 4
முறை உள்ளே உறியச் சொல்லவும்.
மருந்து ஏதும் இல்லையெனில்
அல்லது மேற்சொன்ன முறையில்
பலனில்லையெனில் உடனடியாக
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

மின்சாரம் தாக்குதல்:-

சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய
நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த  வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள்.

சிகிச்சை:-
சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும்.
இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம்
புகாத பொருள்கொண்டு மின்
இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல்
அப்புறப்படுத்தவும். சுய
நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த
ஓட்டமும் உள்ளதா?
என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க
தயாராக இருக்கவும்.

தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10
நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால்
மூடி கட்டுப் போடவும்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
நீரில் மூழ்குதல்:-
சுவாசத்தடையும், உடல்
குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும்.
தக்க
பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில்
மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும்.
தரையில் இரண்டு கால்களுக்கு இடையில்
குப்புற படுக்க வைக்கவும். உங்கள்
இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில்
தூக்கவும்.
இரண்டு, மூன்று தடவைகள்
அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும்
தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து,
வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து,
சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில்
உள்ளவர்கள்
ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த
துணியால் கீழும் மேலும் முழு உடலையும்
சுற்றி வைக்கவும்.
மூச்சுக் குழாய் வழியாக நீர்
செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு
வீக்கமடைந்து 2 அல்லது 3
மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக்
குழாயை அடைத்து தடையை உண்டாக்கும்.
ஆகவே அவரை மருத்துவமனையில் முதல்
உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில்
மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம்
மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற
வேண்டும்.

எலும்பு முறிவு:-

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக
அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி,
வீக்கமும் ஏற்பட்டிருக்கும்.
ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள்
பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க
முடியாத வலி உண்டாகும்.

சிகிச்சை :-

அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும்.
உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள
மூட்டுகள் அசையா வண்ணம்
ஆதரவு கொடுத்து கட்டு போடவும்.
மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால்
தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த
எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும்.
கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால்
சிம்புகள் வைத்து கட்டு போடவும்.
முக்கியமாக இரு கால்களையும்
பாதங்களையும் சேர்த்து வைத்து 8
வடிவகட்டு போடவும்.

சுளுக்கும் - சதை பிடிப்பும்:-

வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும்,
வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும்.

சிகிச்சை:-

ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி,
ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப்
பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள்
இருக்கமான ஆடை, காலணிகள்
எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக
பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம்.
ஓய்வு கொடுக்க வேண்டும்.
பனிக்கட்டி ஒரு துணியில்
சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின்
மீது வைத்து இறுகக்கட்டு போடவும்.
அதிகமாக இறுக்க வேண்டாம்.
உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20
நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர்
ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.
மருத்துவ உதவிக்கு நாடவும்.

கை, கால் வலிப்பு
(காக்காய் வலிப்பு):-
கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல்
இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன்
அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக
இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில
நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம்
சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்;
சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள்.

சிகிச்சை:-
கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த
தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும்.
தலைக்கடியில், கை, கால்கள் அசையும்
போது தரையில் உராய்ந்து காயங்கள்
ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும்.
அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள்
படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால்
அவைகளை அப்புறப்படுத்தவும். கை,
கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம்.
கழுத்தில் மார்பில் உள்ள
துணிகளை தளர்த்தி விடவும்.
வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து,
சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால்
அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்
பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல
வேண்டாம்.

பக்கவாதம்:-

மூளைக்கு செல்லும் ரத்தம்
தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம்
காரணமாக மூளை ரத்தக்குழாய்
வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும்.
முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க
முடியாமை), கை, கால்களில் சோர்வு,
நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம்,
தள்ளாட்டமுடன் நடை, கண்களில்
பார்வை பாதிப்பு, தாங்க முடியாத
தலைவலி, போன்றவை ஏற்படும்.

சிகிச்சை:-

இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-
நேரத்தை குறித்துக்
கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப
வேண்டும். வாயில் வரும் எச்சில்
போன்றவற்றை துடைத்து விட்டு தலையை
உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும்.
டோலியில் எடுத்துச் செல்லவும்.

இதயக் கோளாறுகள்

மார்பு வலி:-

மார்பின் அடிபாகத்தில்
பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல்
நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை-
கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில்
எடுக்கும். சுவாசமும் கடினமாகும்.
திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும்.
மேல் மூச்சு வாங்கும்.

சிகிச்சை:-
உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு,
இடுப்பிலுள்ள
துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த
மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம்
சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம்
ஏதாவது மாத்திரை இருந்தால்
நாக்குக்கு அடியில்
வைத்து சாரினை உறிஞ்சும்
படி சொல்லவும்.
அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால்
அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின்
வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த
வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும்.
மறுபடியும் வலி உண்டானால்
மருத்துவரை நாடவும்.
இதயத்தில் திடீரென்று கோளாறு:-
அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும்
வலி நேரமாக அதிகரித்துக்
கொண்டே போகும். இடது தாடை-இடது கை,
சில நேரங்களில் வலது பக்கமாக
ஓடுவது போல் தோன்றும்.
மார்பு இறுக்கமடைந்து சுவாசம்
விடுவது கடினமாகும். மயக்கமும்
தலைசுற்றலும் ஏற்படும்.
தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம்
உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள்
நீலமாக காணப்படும். வழுவிழுந்த,
ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக
அளவு வியர்த்து கொட்டுதல்;
காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம்,
குழப்பம்-கை, கால்,
விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம்
நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும்
கைகள் நடுங்கும்.

சிகிச்சை:-
மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு;
அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால்
உடனே கொடுக்கவும். தைரியம்
சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச்
சொல்லவும்.
பின்புறமாக சாய்ந்து உட்கார
வைத்து கழுத்து, மார்பில் உள்ள
துணிகளை தளர்த்தவும்,
முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில்
தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும்
இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்)
மாத்திரை அவர் நாக்குக்கு அடியில்
வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச்
சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல்
உட்கார வைத்து எடுத்துச் செல்லவும்.
ஊர்தியினுள்
சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச்
செல்லவும்.

நாய்கடி:-
வெறி நாய் எச்சலில் ``ரேபிஸ்'' என்ற மிகச்
சிறிய கிருமிகள் மனித
நரம்பு மண்டலத்தையும் மூளையினையும்
தாக்கி உயிரை போக்கக் கூடிய
சக்தி கொண்டது.

சிகிச்சை:-
கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும்
சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த
காயங்கள் இருந்தால் அதன்
மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு
மருத்துவரிடம் அழைத்துச்
சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக்
கொள்ளவும்.
நாயை கால் நடை மருத்துவமனையில்
ஒப்படைத்தால்
அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன்
மூளையை சோதித்து ``ரேபிஸ்'' தாக்கம்
ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட
அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட
தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்.

நாசியிலிருந்து ரத்த ஒழுகல்:-
வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல்
உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற
காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற
காரணங்களினால் மூக்கின் முன்
பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.

சிகிச்சை:-
உடனே உட்கார
வைத்து தலையை முன்பக்கமாக
குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக
சுவாசிக்க சொல்லவும். பேசுவது,
விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற
காரியங்களை செய்யக்கூடாது.
மூக்கெலும்பின்
கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10
நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2
மணி நேரத்துக்குள்
நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற
வேலைகளை செய்ய வேண்டும்.
மீண்டு ஒழுகல் ஏற்பட்டால்
மருத்துவரை நாடவும்.

நீரிழிவு வியாதி :-
சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த
சருமம், வேகமான நாடி, கடின சுவாசம்,
தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும்,
குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும்.

வயிற்றில் வலி.

சிகிச்சை:-
மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
சுயநினைவு இழந்து விட்டால்,
மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.
சர்க்கரை குறைந்து விட்டால்:-
வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல்
வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக
காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல்
மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல்
முத்து முத்தாக வேர்வைத் துளிகள்-
வாசனை அற்ற சுவாசம்.

சிகிச்சை:-
உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில்
2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்''
கரைத்து குடிக்கச் சொல்லவும்.
அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து,
ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது
சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும்.
கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த
பானங்கள் கொடுக்க வேண்டாம்.

தகவல்:-சி.எஸ்.குமரகுரு முதல் உதவி-
விரிவுரையாளர்/பயிற்சியாளர்.
தமிழ்நாடு செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்.

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

தாகூர் முதல் கைலாஷ் வரை
இந்தியக் குடிமக்கள்
மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு,
இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல்
வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக்
கிடைத்த முதல் நோபல் பரிசு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர்
சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல்
பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

அல்பேனியாவில் பிறந்து, இந்தியக்
குடியுரிமை பெற்றவரான
அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல்
பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.

அமார்த்யா சென்னுக்கு
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-
ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல்
பரிசு, இந்த ஆண்டு (2014)
அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில்
குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த்
குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான
நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில்
குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன்
சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல்
பரிசை 1983-இல் வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும்
அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல்
வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின்
பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-
இல் இயற்பியலுக்கான நோபல்
பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின்
முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர்
வங்கதேச நாட்டினராகவும் ஆன
முகமது யூனுஸக்கு 2006-இல் அமைதிக்கான
நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான
ரொனால்டு ராஸக்கு மருத்துவத்
துறைக்கான நோபல் பரிசு 1902-இல்
வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான
ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான
நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.

இந்தியாவில் வாழ்பவர்
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான
தலாய் லாமா, இந்தியாவில் கடந்த 1959 முதல்
வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல்
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக
போராடும் இந்தியாவைச் சேர்ந்த சமூக
ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு,
அமைதிக்கான நோபல்
பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான்
சிறுமி மலாலாவுடன், அவர் இந்த
பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

Sunday, September 28, 2014

G... 2G... 3G... 4G...

தொலைபேசியில் நம் ஒலி சைகைகள் (சிக்னல்கள்) மின் சைகைகளாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும். மறுமுனையில் மீண்டும் மின் சைகைகள் ஒலி சைகைகளாக மாற்றப்படும்.இவ்வாறு மாற்றப்பட்ட சைகைகள் ஒயரின் வழியாக அனுப்பப்பட்டும், பெறப்பட்டும் வந்தன.

ஆனால் செல்போன்களில் ஒயர்களை பயன்படுத்த முடியாத காரணத்தால், நம் ஒலி சைகைகள் உலகம் முழுவதும் வியாபித்துள்ள, கண்ணுக்கு தெரியாத ரேடியோ அலைகளின் முதுகில் ஏற்றி விடப்படுகின்றன.

வானுயர்ந்த செல்போன்டவர்களும், வானத்தில் மிதக்கும் செயற்கைகோள்களும் (சேட்டிலைட்டுகளும்) இந்த குறிப்பிட்ட பண்புடைய ரேடியோ அலைகளை நாடு முழுவதும் பரவச் செய்யும்.

மறுமுனையில் இருக்கும் செல்போனானது இவ்வாறு பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளை இனம்கண்டு, அவற்றை ஒலிசைகளாக மாற்றி (முதுகில் இருந்து இறக்கி), நமக்கு எதிர்முனையில் இருப்பவர் பேசுவதை கேட்கச் செய்யும்.

இதில் நம் பேச்சு ரேடியோ அலைகளாக மாற்றப்படுவதை டிரான்ஸ்மிட்டிங் என்றும், எதிர்முனையில் இருந்து கேட்கும் நிலையை ரிசீவர் என்று அழைப்பர். செல்போன்களில் ஒரே நேரத்தில் பேசவும்கேட்கவும் முடியும். இதனால் இவற்றை டிரான்ஸ்-ரிசீவர் என்று அழைப்பர்.

முந்தைய தலைமுறை காவல்துறை வயர்லெஸ்கள், ஒரு நேரத்தில் டிரான்ஸ்மீட்டர்களாகவோ அல்லது ரிஸிவர்களாக மட்டுமே செயல்படும்.

இதனாலேயே ஒவ்வொரு உரையாடல் முடிந்த பின்னும் ஓவர் என்று சொல்லி, டிரான்ஸ்மிட்டரை ரிஸிவர் நிலைக்கு மாற்றி பதிலுக்காக காத்திருப்பர்.ஆரம்ப நாட்களில் ஒலி சைகைகளானது மின்சைகைகளாக மாற்றப்பட்டு ரேடியோ அலைகளின் மீது ஏற்றப்பட்டன. அதிக துல்லியம் மற்றும தகவல் (டேட்டா) பரிமாற்றத்திற்காக ஒலி சைகைள் டிஜிட்டல் எனப்படும் 0 மற்றும் 1 என்ற சைகைகளாக மாற்றப்பட்டு, ரேடியோ அலைகளின் மீது ஏற்றப்பட்டன. சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்த டிஜிட்டல்வழித்தடத்தின் அகலம் அதிகரிக்கப்பட்டது. (நம் ஊர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படுவதைப் போன்று). இந்த அகல வழிப்பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.இதில் மின்சைகளாக அனுப்பட்ட நிலையானது முதல் தலைமுறை (1ஆம் ஜெனரெஷன்) ஆகும்.

மின்சைகைகள் டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்ட மாற்றமானது இரண்டாம் தலைமுறை (2ஆம் ஜெனரேஷன்) (2ஜி) ஆகும்.

பாதையின் அகலம் விரிவுபடுத்தப்பட்ட நிலையானது மூன்றாம் தலைமுறை (3ஆம் ஜெனரேஷன்) (3ஜி)ஆகும்.

மேலும் பாதை விரிவுபடுத்தப்படவிருக்கும் நிலையானது 4ஆம் ஜெனரேஷன் (4ஜி) ஆகும்.இதில் முதல் தலைமுறை போன்களில் பேச்சு பரிமாற்றம் மட்டுமேசெய்ய இயலும்.

இரண்டாம் தலைமுறை போன்களில் பேச்சு பரிமாற்றத்துடன், குறைந்த வேகமுடைய (256கே.பி.பி.எஸ் எல்லைக்குள்) தகவல் (இணைய) பரிமாற்றம் செய்ய இயலும்.

மூன்றாம் தலைமுறையின் இணைய வேகமானது 3.2எம்.பி.பி.எஸ், 7எம்.பி.பி.எஸ் மற்றும் 21எம்.பி.பி.எஸ் என்று வளர்ந்து வந்துள்ளன. இத்தகைய உயர்வேகத்தின் காரணமாக, அதிக வேக இண்டர்நெட் பயன்பாடு மட்டுமின்றி, நொடிப்பொழுதில் போட்டோக்களையும், வீடியோக்களையும் இரண்டு போன்களுக்கிடையே அனுப்ப இயலும். இதன் பயனாகவே வீடியோ கால் எனப்படும், முகம் பார்த்து பேசும் வசதி, 3ஜி போன்களில் இன்று சாத்தியமாகி உள்ளது.

Tuesday, September 23, 2014

சுடும் நிஜம்

சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்கான முதல் வேலை, அதைப்பற்றி அறிந்து கொள்வதுதான்.

இதோ, நமது சுற்றுச்சூழல் பற்றி அதிர்ச்சியடைய வைக்கும் சில உண்மைகள், சில மாற்று வழிகள்:#

ஒவ்வொரு நிமிடத்துக்கும் 100 ஏக்கர் மழைக்காடுகள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.

# நாளிதழ்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 25 கோடி மரங்களைக் காப்பாற்ற முடியும்.

# அமெரிக்க நிறுவனங்கள் ஓராண்டில் பயன்படுத்தும் காகிதத்தை மட்டும் வைத்துப் பூமிப் பந்தை மூன்று முறை சுற்றிவிடலாம்.

# நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 10 கோடி கிலோ குப்பை உருவாகிறது. அப்படியென்றால், ஆண்டுக்குச் சராசரியாக 3650 கோடி கிலோ குப்பை.

# கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் 10 லட்சம் கடல் உயிரினங்கள் ஆண்டுதோறும் இறந்துபோகின்றன.

# சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பதில் ஒரு இந்தியரைப் போல 35 மடங்கும், வங்கதேசத் தவரைப் போல 140 மடங்கும், ஆப்பிரிக்கரைப் போல 250 மடங்கும் ஓர் அமெரிக்கர் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கிறார்.

# வளர்ந்த, பணக்கார நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தை, வளர்ந்துவரும் ஏழை நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தையைப் போல 40 மடங்கு அதிகப் பொருட்களை வாங்குகிறது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

# ஒரு கண்ணாடி குடுவையோ, புட்டியோ முழுமையாக மக்கிப் போக 4,000 ஆண்டுகள் ஆகும். அதனால் உடையும்வரை கண்ணாடிப் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

# அலுமினியப் பாத்திரங்களைக் காலாகாலத்துக்கும் மறுசுழற்சிசெய்து பயன்படுத்திக்கொண்டே இருக்க முடியும். அதேநேரம் உணவுப்பொருட்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல.

# குளிர்பானங்கள், மற்றப் பொருட்கள் அடைக்கப்பட்டுவரும்அலுமினியக் குவளையை மறுசுழற்சி செய்வதன் மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தால், ஒரு டிவியை மூன்று மணி நேரத்துக்கு இயக்க முடியும்.