இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த
பொழுது டாக்டர். இராதாகிருஷ்ணன் ,
ஆங்கிலேயர்களின்
பாராட்டு விருந்து ஒன்றிற்கு சென்று
இருந்தார். அப்போது ஓர் ஆங்கிலேயர்,
“ஆண்டவனுக்கு எங்கள்
மாதிரி ஆங்கிலேயரிடம் தான் அன்பு அதிகம்!
அவர் முயற்சி செய்து அதிக
விருப்பத்தோடு எங்களைப் படைத்தார்.
அதனாலேதான் எங்களது உடல்
இவ்வளவு வெண்மையாக இருக்கிறது!”
என்று கூறினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த டாக்டர்
இராதாகிருஷ்ணன் சிரித்துக்
கொண்டே இவ்வாறு பதில் கூறினார்.
“நண்பர்களே! ஒரு சமயம் ஆண்டவன்
ரொட்டி தயாரிப்பதற்கு ஆசைப்பட்டார்.
உடனே அதற்கான முயற்சியில் இறங்கினார்.
முதல் ரொட்டியைச் சுட்டார். அது சரியாக
வேகவில்லை. அதனாலே வெள்ளையாகச்
சிலர் பிறந்தார்கள்!
இரண்டாவதாக
ஒரு ரொட்டியைச் சுட்டார். அது நிறைய
நேரம் வெந்து விட்டது. அதனாலே கருப்பாகச்
சிலர் பிறந்தார்கள்.
ஆண்டவன்
இப்படி இரண்டு முறை அனுபவப்பட்டதற்கு
பிறகு, மூன்றாவது முறை சரியான
பக்குவத்தில் ரொட்டியைய் தயார் செய்தார்.
அது அரை வேக்காடகவும் போகவில்லை.
கரிஞ்சும் போகவில்லை. அதன் காரணமாக
இந்தியர்களாகிய நாங்கள் பிறந்தோம்” .
இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த
அனைவரும் சிரித்து விட்டார்கள்.
இந்நிகழ்ச்சி வேடிக்கையாக இருந்தாலும்
கூட “இந்தியர்கள் ஒரு பக்குவமான மானிடப்
படைப்பு” என்பதை உறுதி செய்கிறது.
No comments:
Post a Comment