Sunday, September 7, 2014

எழுத்தறிவு தினம்......

இன்று உலக எழுத்தறிவு தினம்!
ஒருவர் சமூக, பொருளாதார
வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம்.
ஆண்டு முழுவதும்
கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை.
இது சமூகத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட
உதவுகிறது.
உலகில் இனம், மொழி, வயது, சமூக
பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற
வேண்டும் என்ற நோக்கத்தோடு செப்., 8ம்
தேதி உலக எழுத்தறிவு தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.

"எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி'
என்பது இந்தாண்டு மையக்கருத்து.
ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக
பேசவும், எழுதவும்
தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர்.
எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட
வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த
அளவும் தீர்மானிக்கப்படவில்லை.
இது ஒருவரின் அடிப்படை உரிமை.
எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில்
உரிமைகளை நிலை நாட்ட முடியும்.
எழுத்தறிவு பெறுவது "ஒருவரின் கடமை;
கட்டாயம்'.

என்ன பயன் :
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயம்.
எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை,
குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம்,
வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம்
உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க
முடியும். எழுத்தறிவு மூலம்,
அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த
முடியும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர்,
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.

உலகளவில் 15 வயதுக்குட்பட்டோர்
எண்ணிக்கையில், 77 கோடியே 40 லட்சம்
பேரும், 15 - 24 வயதுக்குட்பட்டவர்களில் 12
கோடியே 30 லட்சம் பேரும்
எழுத்தறிவு அற்றவர்கள்.
எழுத்தறிவு பெறாதவர்களில் மூன்றில் 2
பங்கு பேர் பெண்கள். பெண்
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க
அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் நிலை:
2011ன் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74
சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம்,
பெண்கள் 65.46 சதவீதம். இது 2001
கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக
எழுத்தறிவு சதவீதம், 80.33 சதவீதமாக உள்ளது.
இது 2001ஐ விட 6.9 சதவீதம் அதிகம். 100 சதவீத
எழுத்தறிவு என்பதை நோக்கி முன்னேற
வேண்டியது காலத்தின் கட்டாயம்.

திரிபுரா முதலிடம் :

எழுத்தறிவு சதவீதத்தில்
நாட்டிலேயே முதலிடத்தில்
திரிபுரா உள்ளது. இப்பட்டியலில் தமிழகம்
(80.33) 14வது இடத்தில் உள்ளது. பீகார் (63.82)
கடைசி இடத்தில் உள்ளது.

மாநிலம்    சதவீதம்
1. திரிபுரா94.65
2. கேரளா93.91
3. லட்சத்தீவு92.28
4. மிசோரம்91.58
5. கோவா87.40

No comments:

Post a Comment