Tuesday, September 2, 2014

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

“ஆசிரியர்களின் தந்தை” என்ற
அடை மொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்
டாக்டர் இராதகிருஷ்ணன்.

சிக்கல்கள் நிறைந்த
தத்துவக் கருத்துக்களை எளிமையாக
விளக்கிக் கூறிய தரணி போற்றும் தத்துவ
ஞானி அவர்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் மைசூர்
பல்கலைக்கழகத்திலிருந்து கல்கத்தா பல்கலை
கழகத்துக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய
நிலை. இச்செய்தி மைசூர் பல்கலைக்கழக
மாணவர்களுக்குப் பெருத்த
வேதனையை அளித்தது. பல்கலைக்கழக
வளாகத்திலிருந்து இரயில்
நிலையத்திற்கு குதிரை வண்டியில்
புறப்பட தயாரானார் இராதாகிருஷ்ணன்.
ஆனால் மாணவர்கள் அன்பின் மிகுதியால்
வண்டியில் பூட்டியிருந்த
குதிரைகளை அவிழ்த்து விட்டு தாங்களே
சென்றனர். மாணவர்களின் குருபக்தியையும்
மாணவர்கள்பால் அவருக்கிருந்த
பாசத்தையும் எண்ணி அனைவரும்
வியந்தனர்.
இதனை மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக
பிற்காலத்தில் நினைவு கூர்ந்து உள்ளம்
நெகிழ்ந்திருக்கிறார் இராதாகிருஷ்ணன்.

இராதாகிருஷ்ணன் முதன் முதலில்
காந்திஜியை சந்தித்தது தமிழ்நாட்டில்தான்.
முதல் சந்திப்பே மிகவும் சுவையானது.
இருவரும் உரையாடிக்
கொண்டிருக்கையில்
காந்திஜி ‘பாலை அசைவ உணவாகத்தான்
கருத வேண்டும். பசுவின்
இரத்தத்திலிருந்து உற்பத்தியாவது தானே
அது இறைச்சிக்கு சமானமே’ என்றார்.

உடனே இராதாகிருஷ்ணன் ‘அப்படியானால்
நம்மில் யாருமே சைவ
உணவை உட்கொள்ளுபவர்கள் இல்லை.
மனிதனுடைய மாமிசத்தை சாப்பிடும்
காட்டுமிராண்டிகள்தான். தாயின்
பாலை உண்டு வளரும் மனிதன் அவள்
இரத்தத்தின் சத்தான பாலை, அதாவது மனித
இறைச்சியின்
சாரத்தைத்தானே குடித்து வளர் கிறான்’
என்று பதிலளித்தார்.

இன்னொரு சமயம்
காந்திஜி ‘வியாதிக்கு மருந்து சாப்பிட்டு
அதை குணப்படுத்திக் கொள்ள
வேண்டுமென்பதில்லை.
இயற்கை வைத்தியமே நோயை
தீர்த்துவைக்கும்..
காடுகளில் வாழும்
பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு எந்த
மருத்துவ உதவியும் கிடைப்பதில்லையே.
அவர்கள் வாழாமலா இருக்கிறார்கள்?
என்றார்.

அதற்கு இராதாகிருஷ்ணன்
‘காடுகளில் இருப்பவர்கள் என்ன இறவா வரம் பெற்றா வாழ்கிறார்கள். பல ஆயிரம் பேர்கள்
அங்கு நோயினால்
இறந்து போயிருக்கிறார்கள்’ என்றார்.

‘அது எப்படி உங்களுக்குத் தெரியும்?’
என்றார் காந்திஜி.

‘உங்களுக்கு அவர்கள்
வியாதியால் இறக்கவில்லை என்று எப்படித்
தெரியுமோ, அப்படித்தான் எனக்கும்
தெரியும்’ என்றாராம்.

இது போன்ற இராதாகிருஷ்ணனின் தர்க்க
வாதம் காந்திஜியை வியப்பில் ஆழ்த்தியது.

1950ல் இந்திய
அரசு இராதா கிருஷ்ணனை ரஷ்யாவின்
அரசாங்கத் தூதுவராக நியமித்தது.
அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் அதிபராக
இருந்தார். அடிமைப் பட்டுக்
கிடந்து அப்போது தான் விடுதலை பெற்ற
இந்திய நாட்டின் மீது அவருக்கு அவ்வளவாக
உயர்ந்த அபிப்ராயம் இல்லை.

இந்த நிலையில்
தான் இராதாகிருஷ்ணன் அங்கு தூதராகச்
சென்றார்.
ரஷ்யாவின் தூதர்
பணி முடிந்து இந்தியா திரும்புகையில்
அவருக்கு பிரிவு உபசார
விருந்து அளிக்கப்பட்டது. ஒர் அரசாங்க
தூதருக்கு ரஷ்ய அமைச்சகம்
விருந்தளித்து கௌரவிப்பது அதுவே முதல்
முறை. பெரும்பாலும் இரவில் நடக்கும்
விருந்துகள் இராதாகிருஷ்ணனின்
வசதியை முன்னிட்டு பகலிலேயே நடந்தது.

மாஸ்கோவில் இருந்து புறப்படும் முன்
ஸ்டாலினை சந்தித்தார்.
அப்போது ஸ்டாலின் நோய்வுற்றிருந்தார்.
அவருடைய முகம் வீங்கி யிருந்தது. பாரத
நாட்டின் வேதாந்தியான
இராதாகிருஷ்ணன் அவரின்
கன்னங்களை மெதுவாக வருடினார்.
முதுகைத் தடவிக் கொடுத்தார்,
ஆரத்தழுவிக் கொண்டார்.
தத்துவ ஞானியின் இந்த அன்புப்
பெருக்கு ஸ்டாலின்
உள்ளத்தை உருக்கிவிட்டது.

‘மற்றவர்கள்
நினைப்பது போல் என்னை அரக்கனாக
எண்ணாமல் மனிதன் என்று எண்ணிப் பழகிய
முதல் மனிதர் நீங்கள்தான். நீங்கள்
பிரிந்து செல்வது பற்றி மிகவும்
வருந்துகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ
வாழ்த்துகிறேன். நான் இனி அதிக காலம்
இருக்க மாட்டேன் என்றார் ஸ்டாலின்.

இராதா கிருஷ்ணனன்
விடைபெற்றபோது அவர் கண்கள் கலங்கின.
அவர் கூறியபடியே ஆறு மாதங்
களுக்குப்பின் ஸ்டாலின்
மறைந்து விட்டார். யாரையும் எளிதில்
பாராட்டி விடாத ஸ்டாலின் மனம்
திறந்து பாராட்டியது இராதாகிருஷ்ண
னின் பெருமைகளுக்கு ஓர்
எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment