Wednesday, July 30, 2014

குழந்தை பாடல்கள் -- மைனா

மைனா மைனா மைனா

மஞ்சள் வாய் மைனா

மழலை போன்ற பேச்சால்

மனதை மயக்கும் மைனா

அருகே நெருங்கிப் போனாலும்

கொஞ்சிப் பேசும் மைனா

அன்பு காட்டும் அனைவரையும்

அழகாய் அழைக்கும் மைனா

அப்பா முதல் பாப்பா வரை

அனைவருக்கும் பிடிக்கும் மைனா

எங்க வீட்டு மைனா

எனக்குப் பிடித்த மைனா!

சிரிக்கலாம் வாங்க

ஒரு அழகான குடும்பம், கணவன்
மனைவி மற்றும் இரு மகன்கள்
வாழ்ந்து வந்தனர்,

இரு மகன்களும்
பெற்றோர்களுக்கு தொல்லைதரும்
விஷயங்கள்
மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள்,

திருடுவது, பொய் சொல்வது,
அடுத்த வீட்டுப்
பிள்ளைகளை அடிப்பது என
எப்போதும் கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் திருத்த
எத்தனையோ முறை முயன்று,
தோற்றுப் போனார்கள் பெற்றோர்கள்,
இருவரையும் ஒரு பாதிரியாரிடம்
அழைத்துப் போகலாம்
என்று முடிவு செய்தார்கள்..

பாத்ரியாரை சந்தித்தார்கள், அவர்
முதலில் ஒருவனை மட்டும்
உள்ளே அழைத்தார்,

இங்கே தப்பு செய்தால் மேலுலகத்தில்
கடவுள் தண்டிப்பார் என்பதைப் புரிய
வைக்கும் முயற்சியாக,
‘கடவுள்
எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.

அதற்க்கு அவன் எந்த பதிலும்
சொல்லவில்லை.

‘எங்கே கடவுள் என்பதற்குப் பதில்
சொல்’
அவன் விழித்தான்.

‘கடவுள் எங்க இருக்கிறார்ன்னு
சொல்லப் போறியா இல்லையா?’

அவன் அழ ஆரம்பித்தான்.

‘சரி. நீ போ.
உனது சகோதரனை உள்ளே வரச் சொல்’
என்றார்.

அவன் வேகமாக
அறையை விட்டு ஓடிப்போய்
தனது சகோதரனிடம் சொன்னான்.

‘டேய்! இந்த தடவை பெரிய சிக்கலில்
மாட்டிக் கொண்டோம். கடவுளைக்
காணோமாம் . நாம்தான்
திருடியதாக சந்தேகப்படுகிறார்கள்’
என்று...!

மின் கட்டணம் கணக்கிடும் முறை

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம்
தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று...!

வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள்
எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய்
மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

—————————————

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால்
உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம்
ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

——————————-

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால்
உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10
யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம்
ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)

————————–

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+
அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+
10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)

Tuesday, July 29, 2014

படித்ததில் பிடித்தது...

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில்
ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய்
நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக்
கேட்டார்.

கூடியிருந்த அனவரும்
தனக்கு பிடிக்குமென
கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில்
ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத்
தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என
சொல்லி
அந்த 500 ரூபாயைக்
கசக்கி சுருட்டினார்.
பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன்
மீது உங்களுக்கு இன்னும் விருப்பம்
இருக்கிறதா?” என்றார்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில்
போட்டு காலால் நசுக்கி அந்த
அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல்
உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?
என்றார்
அனைவரும் இப்போதும்
கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500
ரூபாய்தாள் பல முறை கசங்கியும்
மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை.

ஆனால்
மனிதர்களாகிய நாம் அவமானப் படும்
போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும்
மனமுடைந்து போய்
நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும்
குறைவதில்லை. நீங்கள்
தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத்
தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும்
குறைவதில்லை.

வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.

ஆகையால்
தன்னம்பிக்கையை இழக்காமல்
வாழுங்க...!

Monday, July 28, 2014

உடல் பருமன் உஷார்...

எ.கா

  உடல் எடை = 80 கி
உயரம் = 172 செ.மீ / 1.72 மீ

___80___ = 27.04
1.72*1.72

27.04 - உடல் பருமனுக்கு முந்தைய நிலை

படித்ததில் பிடித்தது

"சாப்பிட்டேன்" என அம்மாவிடமும்,

"கவலைப்படவில்லை" என
அப்பாவிடமும்,

"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்,

"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..

.
.
.
ஆனால்.....
.
.
.
.
.
.
.
...
..

.
"காலையிலிருந்து சாப்பிடல...
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு" என
நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது

என் அம்மா....

சுடச்சுட உணவு இருந்தால்,
தாத்தா அதிகம் சாப்பிடுவார் !!

அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார் !!

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள் !!

தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான் !!

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள் !!

Sunday, July 27, 2014

காலத்தின் மதிப்பு

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...
பெறுமதியை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின்
மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப்
பதக்கம் வாங்கியவரைக் கேட்டால்
தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில்
உயிர் தப்பியவரைக் கேட்டால்
தெரியும்...!

► ஒரு நிமிடத்தின்
மதிப்பை தூக்கிலடப் படும்
கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர்
காக்க போராடும் மருத்துவரைக்
கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின்
மதிப்பை அன்று வேலை இல்லாத
தினக் கூலி தொழிளாலரைக்
கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப்
பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக்
கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப்
பிரசவம் ஆகும் ஒரு தாயைக்
கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில்
தோல்வியுற்ற
ஒரு மாணவனைக் கேட்டால்
தெரியும்...!

>>நேரத்தை வீணாக்கும்
போது கடிகாரத்தை பார்..
ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...

Saturday, July 26, 2014

பொம்மைப் பாடல்கள்

ஆறே ரூபாய் மரக்குதிரை

கொள்ளும் புல்லும் கேக்காது

கொடுத்தால் கூடத் திங்காது

பல்லைக்காட்டிக் கனைக்காது

பலமாய்க் காலால் உதைக்காது

அஞ்சாதிருக்கும் எங்குதிரை

ஆறே ரூபாய் மரக்குதிரை....

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200

5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500

7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

8. சென்னைப் பல்கலைக் கழகம்-
அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -
1500

10. மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகம் -500

11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

13. Tamilnau Teacher Education University -350.

14. சேலம் விநாயகா மிஷன்
பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம்
பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக
அனுப்பும் போது எந்த விதமான
கட்டணமும் செலுத்த
வேண்டியது இல்லை.

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்-
275.

மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த
பல்கழைக்கழகத்தில்
உண்மை தன்மை சான்று பெற்றவர்கள்
தற்பொழுது நடைமுறையில் உள்ள DD
தொகையினைக் குறிப்பிடவும

Finger Multiplication of 6,7,8,9,10 Time Tables | Math Tricks

Place your fingers as in the image
and consider the value of fingers in each
hand to be 6, 7, 8, 9 and 10 - in the
order from small finger to thumb.

Example
Consider the multiplication of 7 × 8.
Make the finger numbered 7 in the left
hand to touch the finger numbered 8 in
the right hand.

Step 1:
Now in the left hand, count the finger
which is touching (7) and the ones below
that = 2 fingers

Similarly in the right hand, count the
finger which is touching (8) and the ones
below that = 3 fingers

Add the above counted fingers = 2 + 3 =
5 fingers
Multiply the number by 10 = 5 × 10 = 50
-----> (1)

Step 2:
In the left hand, count the fingers
above the touching finger = 3 fingers
Similarly in the right hand, count the
fingers above the touching finger = 2
fingers
Multiply both = 3 × 2 = 6 -----> (2)

Step 3:
Add (1) and (2),
= 50 + 6 = 56
So, the answer for 7 × 8 = 56 which is
easily found through the above trick.

Note:
If there is no finger above the considered
(touched) finger, then consider the value
as zero (0).

மின்னல் பெருக்கல் - ஓரிலக்க எண்கள்

மின்னல் பெருக்கல் - ஓரிலக்க
எண்கள்

அனைவருக்கும் மனப்பாடமாக
பத்தாவது வாய்ப்பாடு வரை சொல்லத்
தெரியும். ஆனால்
வாய்ப்பாடு மறந்து விட்டால் என்ன
செய்வது? கவலையே வேண்டாம்.

இந்த
உத்தி உங்கள் வாய்ப்பாடு மனப்பாடப்
பிரச்சனையை தீர்த்து வைக்கும்.

ஓரிலக்க எண்கள் அனைத்தும்
பத்துக்கு கீழே உள்ள எண்கள் .
எவ்வளவு கீழே அல்லது அருகில் உள்ளன
என்பதை வைத்துதான் நாம் இந்தக்
கணக்குகளை போடப் போகிறோம்.

முதல் உதாரணம் :
7 x 8
முதல் எண் ஏழு.

இது பத்தில்
இருந்து எவ்வளவு
குறைச்சல்.
                                      10 - 7 =3

அடுத்த எண் எட்டு.

இது பத்தில்
இருந்து எவ்வளவு
குறைச்சல்.
                                          10 - 8 =2

இனி விடைகளை
பெருக்குங்கள்.

3 x 2 = 6.

இது விடையின்
இரண்டாவது பகுதி

எட்டில் இருந்து மூன்றை
கழியுங்கள்

8 - 3 = 5.

அல்லது ஏழில்
இருந்து இரண்டை
கழியுங்கள்
7-2 = 5.
இரண்டிற்கும்
ஒரே விடைதான் 5.

இது விடையின் முதல்
பகுதி
அதாவது 56

இரண்டாவது உதாரணம் : 9 x 6

முதல் எண் ஒன்பது.
இது பத்தில்
இருந்து எவ்வளவு
குறைச்சல். 10 - 9 = 1

அடுத்த எண் ஆறு.
இது பத்தில்
இருந்து எவ்வளவு
குறைச்சல். 10 - 6 = 4

இனி விடைகளை
பெருக்குங்கள். 1 x 4 = 4.

இது விடையின்
இரண்டாவது பகுதி

ஒன்பதில் இருந்து ஒன்றை
கழியுங்கள் 9 - 4 = 5.
அல்லது ஆறில்
இருந்து ஒன்றை
கழியுங்கள் 6-1 = 5.
இரண்டிற்கும்
ஒரே விடைதான் 5.

இது விடையின் முதல்
பகுதி
அதாவது 54

குறிப்பு
ஐந்து மற்றும் அதற்கு கீழே உள்ள
எண்களுக்கு இந்த
முறையை பயன்படுத்தாதீர்கள்.

மின்னல் கழித்தல்...

மின்னல் கழித்தல்

100, 1000, 10000, 100000, 1000000, 10000000
இந்த எண்களிலிருந்து சுலபமாக
கழிப்பது எப்படி?

எல்லாமே ஒன்பதிலிருந்து.
கடைசி மட்டும் 10லிருந்து.

இந்த
மின்னல் மந்திரத்தை ஞாபகத்தில்
வைத்துக்கொண்டால் கண் மூடித்
திறப்பதற்குள் பின்வரும் கழித்தல்
கணக்குகளை போட்டுவிடலாம்.

1000 - 326

ஆயிரத்தை விட்டு
விடுங்கள்

326ல் கடைசி இலக்கம்
(வலது இலக்கம்) 6.

அதை பத்திலிருந்து
கழித்தால் 4.

2ஐ 9லிருந்து கழித்தால் 7

3ஐ 9லிருந்து கழித்தால் 6

674 இதுதான் விடை.

இன்னொரு உதாரணம்

10000 - 7492

பத்தாயிரத்தை விட்டு
விடுங்கள்

7492ல் கடைசி இலக்கம்
(வலது இலக்கம்)
2.அதை பத்திலிருந்து
கழித்தால் 8.

9ஐ 9லிருந்து கழித்தால் 0

4ஐ 9லிருந்து கழித்தால் 5

7ஐ 9லிருந்து கழித்தால் 2

2508 இதுதான் விடை.

சரி இப்போ இன்னொரு உதாரணம்
பாரக்கலாம்.

100000 - 86514

ஒரு இலட்சத்தை விட்டு
விடுங்கள்

86514ல் கடைசி இலக்கம்
(வலது இலக்கம்)
4.அதை பத்திலிருந்து
கழித்தால் 6.

1ஐ 9லிருந்து கழித்தால் 8

5ஐ 9லிருந்து கழித்தால் 4

6ஐ 9லிருந்து கழித்தால் 3

8ஐ 9லிருந்து கழித்தால்1

13486 இதுதான் விடை.

இப்போ நீங்க என்ன பண்றீங்கன்னா . . .
100 - 68 = ?
100 - 23 = ?
100 - 59 = ?
1000 - 79 = ?
1000 - 34 = ?
1000 - 61 = ?
1000 - 661 = ?
1000 - 783 = ?

Friday, July 25, 2014

உடல் எடை குறைய உற்சாக வழிகள்!

காலை உணவு கண்டிப்பாகத் தேவை.
குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம்.

ஆவியில் வேகவைத்த இட்லி,
இடியாப்பம் போன்ற உணவுகளைச்
சாப்பிடலாம்.

குறைந்தது நாள்
ஒன்றுக்கு மூன்று லிட்டர்
வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய
உணவை நேரத்துடன்,
அளவோடு சாப்பிடுவது நல்லது.

உடல் பருமனுக்கு முக்கியக்
காரணமான சாதத்தைக் குறைத்து,
ஒரு பங்கு சாதம்,
இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள்
என்று அளவாகச் சாப்பிடலாம்.

இரவில்
சாதத்தைத் தவிர்த்து, தோசை,
சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள்
பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு,
பாகற்காய் போன்றவற்றை உணவில்
அடிக்கடி சேர்த்துக்
கொள்வது நல்லது.

பழ வகைகளில் மா, பலா, வாழை,
சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து,
மிதமான இனிப்பு உள்ள
சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச்
சாப்பிடலாம்.

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும்
கொழுப்பு நீக்கப்பட்ட
கோழி இறைச்சியைக்
குழம்பு வைத்துச் சாப்பிடலாம்.

மீனை எண்ணெயில் பொரிக்காமல்,
குழம்புவைத்து சேர்த்துக்கொள்ள
லாம். முட்டையின் வெள்ளைக்
கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள்
குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு,
உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30
நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய
வேண்டும்.

Thursday, July 24, 2014

ஸ்கிப்பிங் பண்ணுங்க!


10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது,- 30
நிமிடம் ஜாகிங் செய்வதற்குச் சமம்.

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45
நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால்,
உடலை ஃபிட்&ஆக வைத்துக்கொள்ள
முடியும்.

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள்
ஸ்கிப்பிங் செய்ததும் 30 விநாடிகள்
முதல் ஒரு நிமிடம்
வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

ஜாகிங்கைவிட ஸ்கிப்பிங்கில்
அதிகப்படியான
கொழுப்பு எரிக்கப்படுகிறது.

குழந்தைகள் அனைவரும் தவறாமல்
வீட்டிலேயே செய்ய வேண்டிய ஓர்
எளிமையான பயிற்சி.

குழந்தைகள்
நன்கு உயரமாக வளரவும் இந்தப்
பயிற்சி உதவுகிறது.

எப்போது செய்யவேண்டும்?
இதற்கென குறிப்பிட்ட நேரம்
தேவையில்லை.
எப்போது வேண்டுமானாலும்
செய்யலாம். காலையில் செய்வதால்,
சுத்தமான காற்றும் இயற்கையான
சூழலும் டென்ஷன் இல்லாத
அமைதியும் உடலுக்கு இன்னும்
ஆரோக்கியத்தைத் தரும்.

யாரெல்லாம் செய்யக் கூடாது?
பெரியவர்கள், மூட்டு வலி மற்றும்
முழங்கால் பிரச்னை உள்ளவர்கள்,
கயறைத் தாண்டிக் குதிக்க
முடியாது என்பதால், அவர்கள்
இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
கர்ப்பிணிகள் செய்யவே கூடாது.
வயதான பெண்கள் மற்றும்
தொப்பையுள்ள பெண்கள் ஸ்கிப்பிங்
செய்யும்போது கவனம் தேவை.
பெண்கள் தாண்டிக்
குதிக்கும்போது,
கர்ப்பப்பை கீழே இறங்குவதற்கான
வாய்ப்பு உண்டு. இந்த
வாய்ப்பு மிகமிகக்
குறைவாகவே இருந்தாலும்கூட
மருத்துவரின்
ஆலோசனை பெறுவது நலம்.

எதைச் சாப்பிடலாம்? எதைத்
தவிர்க்கலாம்?
ஸ்கிப்பிங் விளையாடும்போது,
வெறும் வயிற்றுடன் இல்லாமல்
ஏதாவது சாப்பிட்ட பிறகு செய்ய
வேண்டும்.
வயிறு நிறையச் சாப்பிடக்
கூடாது. சாப்பிட்ட
உடனே ஸ்கிப்பிங் செய்யக் கூடாது.
குளுகோஸ் அதிகம் உள்ள
வாழைப்பழம்,
மாவுச்சத்து குறைவாக உள்ள
கோதுமை பிரெட் இதில் ஏதேனும்
ஒன்றைச் சாப்பிடலாம்.
டாக்டரின்
ஆலோசனைப்படி கார்போஹைட்ரேட்,
புரதம், நார்ச்சத்து, கொழுப்பு உள்ள
உணவுப்
பொருள்களை சரிவிகித்தில்
சாப்பிடலாம்.

Wednesday, July 23, 2014

ஆந்தைகளுக்கு கொம்பு உண்டா....?

ஆந்தை இரவில் இரை தேடும்
பறவை இனம்.

ஆந்தைகளில் 200 வகைகள்
உள்ளன.

தட்டையான முகம் கொண்ட ஆந்தைகள்
பெரிய கண்கள் கொண்டவை.

சிலவகை ஆந்தைகளால் தலையை 360
டிகிரி வரை திருப்பிப் பார்க்க
முடியும்.

தொலைவில் உள்ள இரையைக்கூட
ஆந்தைகளால் தெளிவாகப் பார்க்க
முடியும்.

ஆந்தைகள் பூச்சிகளையும் சிறிய
பிராணிகளையும் உணவாக
உட்கொள்ளும். சில ஆந்தை வகைகள்
மீன்களையும் வேட்டையாடி உண்ணும்.
ஆந்தைகளின் வலுவான நகங்கள்
இரையைப் பிடிக்கவும் கொல்லவும்
உதவியாக உள்ளன.

அண்டார்க்டிகா தவிர மற்ற
எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள்
உள்ளன.

ஆந்தையின் காதுகள் இரண்டும்
வேறு வேறு அளவுகளில் இருக்கும்.
ஆந்தைகளுக்குக் கேட்கும் திறன்
அதிகம்.

ஆந்தைகளால் பகலில் பார்க்க
முடியாவிட்டாலும் இரை எழுப்பும்
ஒலி மூலம் அடையாளம் கண்டுகொள்ள
முடியும்.

நிறைய ஆந்தைகளுக்குத் தலையில்
காது மடல்கள் கொம்புகள் போல
அமைந்திருக்கும். ஆனால்,
அவை காதுகள் அல்ல.
கொம்பு என்று அழைக்கப்பட்டாலும்
அது சிறகுதான்.

ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன.
ஒன்றை மூடித் திறக்கவும்,
மற்றொன்றைத் தூங்குவதற்கும்,
இன்னொன்றைக்
கண்ணை ஆரோக்கியமாகவும்
சுத்தமாகவும் வைத்திருக்கப்
பயன்படுத்திக் கொள்ளும்.

ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக
ஆயிரம் எலிகள் வரை சாப்பிடும்.
அதனால் விவசாயியின் நண்பனாக
ஆந்தை கருதப்படுகிறது.

ஆந்தை இறக்கை விரித்துப்
பறக்கும்போது படபடவென சத்தம்
கேட்காது. இரைக்கு அருகில்
செல்லும் வரை சத்தம் வராது.

பெரும்பாலும் பெண் ஆந்தைகள்
பெரியதாக இருக்கும்.
ஆக்ரோஷத்தை அதிகம்
வெளிப்படுத்தும்.

பெரும்பாலான ஆந்தை வகைகள்
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப்
இடம்பெயர்வதில்லை. ஆனால், நல்ல
உணவைத் தேடி தனியாக அலைபவை.

ஆந்தைகள் ஒரே நேரத்தில்
பன்னிரெண்டு முட்டைகள் வரை இடும்.
மரத்தில் உள்ள பொந்துகளில் வசிக்கும்.
நிலத்தில் உள்ள வளைகள்
குகைகளிலும் ஆந்தைகள் வசிக்கும்.
ஜோடியைக் கண்டுபிடிக்கவும்,

இருட்டில் தனது இடத்தைச் சொல்லவும்
ஆந்தைகள் குரல் எழுப்பும்.

Tuesday, July 22, 2014

சாப்பிட்ட பின் செய்யக்கூடாதவை...

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ
உணவுப் பழக்கம் இன்றியமையாதது.

எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன்,
சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும்
உடல்நலனைப் பாதிக்கும்.

அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள,
சாப்பிட்ட பின் செய்யக்கூடாத
விஷயங்கள் என்னென்ன?

#சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட்
பிடித்தால், அது சாதாரண நேரங்களில்
சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய
கெடுதலை விளைவிக்கும். பல
சிகரெட்டுகளை ஒரே நேரத்தில்
பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த
அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ,
அவ்வளவு பெரிய தீமை இது.

#உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச்
சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது,
அது கெடுதல்.
அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி,
வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும்
நிலையை (Bloated with air)
உருவாக்குகிறது. எனவே,
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம்
முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள்
அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2
மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச்
சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள்.

#சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்காதீர்கள்.
தேயிலையில் அமிலத்தன்மை உள்ளது.
இது உணவில் உள்ள புரதச் சத்தைக்
கடினமாக்கிச் செரிமானத்தைக்
கடினமாக்கும் வாய்ப்பு உண்டு.

#சாப்பிட்ட பிறகு பெல்ட்டுகளைத்
தளர்த்திவிடாதீர்கள்.
அது குடலை வளைத்துத் தடுக்க
வாய்ப்புள்ளது.

#சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம்
கூடாது. குளிக்கும்போது உடல்,
கை, கால்களுக்கு ரத்த ஓட்டம்
அதிகரிக்கும். இதனால் வயிற்றுச்
செரிமானத்துக்குச் செல்ல வேண்டிய
ரத்த ஓட்டம் குறையும்
வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள
செரிமான
உறுப்புகளை இது பாதிக்கக்கூடும்.

#சாப்பிட்ட
பின்பு நடப்பது நல்லது என்று விவரமறிந்தவர்கள்கூடச்
சொல்வது உண்டு. நீரிழிவு நோய்
உள்ளவர்களுக்கு ரத்த
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க,
உடனடி நடை உதவும் என்றுகூடச் சிலர்
சொல்லலாம். சாப்பிட்ட பின் நடந்தால்
செரிமான
உறுப்புகளுக்கு உணவு போய்ச்
சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச்
செய்வதைத் தடுத்து, உணவின்
சத்துகளை ரத்தத்தில் சேர்க்கவிடாமல்
அந்த நடை செய்துவிடும். எனவே, இந்தப்
பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.

#மதிய உணவு, இரவு உணவுக்குப்
பின்னர் உடனே படுத்துத் தூங்கக்
கூடாது. உணவு உண்ட பின்
அரை மணி நேரம் கழித்தே உறங்கச்
செல்ல வேண்டும். அப்போதுதான்
உணவு முறையாகச் செரிக்கும்.

சிரிக்கலாம் வாங்க

நீதிபதி; உங்க
மனைவியை விவாரத்து செய்ய
காரணம் என்ன ?

அப்பாவி கணவர்; அய்யா நான்
ஏற்கனவே ரொம்ப
நொந்து போயிருக்கேன் நீங்களும்
வெந்த புண்ணில்
வேலை பாய்காதீங்க. எந்த
கேள்வியா இருந்தாலும்
அரசு வக்கீலை என் மனைவியிடம்
குறுக்கு விசாரணை
செய்ய சொல்லுங்க

அரசாங்க வக்கீல்
குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன
பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும்
இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன
தகராறு?”

“எங்க கடையில
தகராறு எதுவுமில்லையே,
நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன
சங்கடம் என்று அறிய கோர்ட்
விரும்புகிறது”

“தாம்பரத்தில
எங்களுக்கு உறவுக்காரங்க
யாருமில்லைங்க.
இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும்
கறுப்புதான… அதனால
வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை,
மாசம் ஒண்ணாம்
தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப்
போயிடறாரு”

(இதற்கு மேல் அவரால் தாங்க
முடியவில்லை.)

(மிகவும் சத்தமாக )“எதுக்காக
விவாகரத்து கேட்கிறார்”

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப
எல்லாம் ரத்தக்
கொதிப்பு வந்துடுதாம். நீங்க
நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க…
உங்களுக்கென்ன ரத்தக்
கொதிப்பா வந்திரிச்சு?

இது அபாண்டம்தானே?”