மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம்
தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று...!
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள்
எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய்
மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
—————————————
இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால்
உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம்
ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
——————————-
மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால்
உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10
யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம்
ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
————————–
நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+
அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+
10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)
No comments:
Post a Comment