Saturday, July 26, 2014

மின்னல் கழித்தல்...

மின்னல் கழித்தல்

100, 1000, 10000, 100000, 1000000, 10000000
இந்த எண்களிலிருந்து சுலபமாக
கழிப்பது எப்படி?

எல்லாமே ஒன்பதிலிருந்து.
கடைசி மட்டும் 10லிருந்து.

இந்த
மின்னல் மந்திரத்தை ஞாபகத்தில்
வைத்துக்கொண்டால் கண் மூடித்
திறப்பதற்குள் பின்வரும் கழித்தல்
கணக்குகளை போட்டுவிடலாம்.

1000 - 326

ஆயிரத்தை விட்டு
விடுங்கள்

326ல் கடைசி இலக்கம்
(வலது இலக்கம்) 6.

அதை பத்திலிருந்து
கழித்தால் 4.

2ஐ 9லிருந்து கழித்தால் 7

3ஐ 9லிருந்து கழித்தால் 6

674 இதுதான் விடை.

இன்னொரு உதாரணம்

10000 - 7492

பத்தாயிரத்தை விட்டு
விடுங்கள்

7492ல் கடைசி இலக்கம்
(வலது இலக்கம்)
2.அதை பத்திலிருந்து
கழித்தால் 8.

9ஐ 9லிருந்து கழித்தால் 0

4ஐ 9லிருந்து கழித்தால் 5

7ஐ 9லிருந்து கழித்தால் 2

2508 இதுதான் விடை.

சரி இப்போ இன்னொரு உதாரணம்
பாரக்கலாம்.

100000 - 86514

ஒரு இலட்சத்தை விட்டு
விடுங்கள்

86514ல் கடைசி இலக்கம்
(வலது இலக்கம்)
4.அதை பத்திலிருந்து
கழித்தால் 6.

1ஐ 9லிருந்து கழித்தால் 8

5ஐ 9லிருந்து கழித்தால் 4

6ஐ 9லிருந்து கழித்தால் 3

8ஐ 9லிருந்து கழித்தால்1

13486 இதுதான் விடை.

இப்போ நீங்க என்ன பண்றீங்கன்னா . . .
100 - 68 = ?
100 - 23 = ?
100 - 59 = ?
1000 - 79 = ?
1000 - 34 = ?
1000 - 61 = ?
1000 - 661 = ?
1000 - 783 = ?

No comments:

Post a Comment