அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?
உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர்.
ஆனால், முட்டாள்
என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு.
அதுவும் காரண பெயர் சொல்.
சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம்
தான் என்ன...?
அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம்
தூக்குவதற்கு என்று சில பேர்
இருப்பார்கள்.
அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும்
உண்டு, தங்க இடமும் உண்டு.
திருவிழா காலங்களில் சப்பரம்
தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம்
செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம்
சற்று நேரம் நிற்கும்.
அந்த சமயம் சப்பரம் தூக்கிகள்
ஓய்வு எடுப்பதற்காக, சில பேர்
முட்டு எடுத்துக்
கொண்டு கூடவே வருவார்கள்.
அவர்கள் சப்பரம் நின்ற உடன்
முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள்.
அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.
சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர
அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும்
தெரியாது.
அதிலிருந்து யோசிக்க தெரியாமல்
ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்"
என்று அழைப்பது பழக்கமாக
ஆகிவிட்டது.
எனவே! அறிவாளிக்கு எதிர்பதம்
"முட்டாள்" இல்லை "அறிவிலி"
என்பதாகும்.
Thursday, July 17, 2014
இன்று ஒரு தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment