படித்ததில் பிடித்தது
நமது தாய்த் தமிழ் நாட்டைப்
பற்றி தெரிந்து கொள்வோமா ...?
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
கோபுரம்............
2. தமிழகத்தின் நுழைவாயில் –
தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் –
கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்
– கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் –
பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –
புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின்
முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம்
( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்
தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு –
மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு –
கல்லணை
11. மிகப்பெரிய
திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம்
(மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் –
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் –
ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ
ரெங்கநாதர் கோயில் கோபுரம்
(திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி –
காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் –
தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை –
மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760
km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள
மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள
மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி –
உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து –
திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய
பேருந்து நிலையம் –
கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை –
திருவள்ளுவர் சிலை (133 அடி)
No comments:
Post a Comment