Monday, July 21, 2014

மூன்றாம் வகுப்பு - தமிழ்...

நிலாவுக்கு எத்தனை வேறு பெயர்கள்
இருக்கின்றன என்பது உங்களுக்குத்
தெரியுமா? எண்ணிக்கோங்க...:

நிலவு, பிறை, குபேரன், அம்புலி,
தண்ணவன், மருவு, சுதாகரன், சந்திரன்,
சோமன், கலையினன், அலவன், நசரகரன்,
குரங்கி, அல்லோன், ஆலோன், களங்கன்,
உடுவின் வேந்தன், சசி, கிரணன், மதி,
விது, முயலின் கூடு, நிசாபதி,
கலாநிதி, திங்கள், சாநவ்தன், இந்து,
பசுங்கதிர்.

கடலுக்கு எத்தனை வேறு பெயர்கள்
இருக்கின்றன என்பது உங்களுக்குத்
தெரியுமா? எண்ணிக்கோங்க...:

அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர்,
அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர்,
உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம்,
ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள்,
கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம்,
சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி,
தாழி, திரை, துறை, தெண்டிரை,
தொடரல், தொன்னீர், தோழம், நரலை,
நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி,
நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு,
பரவை, பரு, பாரி, பாழி, பானல்,
பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர்,
பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம்,
வளைநீர், வாரி, வாரிதி, வீரை,
வெண்டிரை, வேழாழி, வேலை.......

குதிரைக்கு  எத்தனை வேறு பெயர்கள்
இருக்கின்றன என்பது உங்களுக்குத்
தெரியுமா? :

புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி,
கலிமா - இதனது வேறு பெயர்கள்...

No comments:

Post a Comment