காலை உணவு கண்டிப்பாகத் தேவை.
குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம்.
ஆவியில் வேகவைத்த இட்லி,
இடியாப்பம் போன்ற உணவுகளைச்
சாப்பிடலாம்.
குறைந்தது நாள்
ஒன்றுக்கு மூன்று லிட்டர்
வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய
உணவை நேரத்துடன்,
அளவோடு சாப்பிடுவது நல்லது.
உடல் பருமனுக்கு முக்கியக்
காரணமான சாதத்தைக் குறைத்து,
ஒரு பங்கு சாதம்,
இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள்
என்று அளவாகச் சாப்பிடலாம்.
இரவில்
சாதத்தைத் தவிர்த்து, தோசை,
சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள்
பெட்டர்.
முட்டைக்கோஸ், வாழைத்தண்டு,
பாகற்காய் போன்றவற்றை உணவில்
அடிக்கடி சேர்த்துக்
கொள்வது நல்லது.
பழ வகைகளில் மா, பலா, வாழை,
சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து,
மிதமான இனிப்பு உள்ள
சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச்
சாப்பிடலாம்.
அசைவப் பிரியர்கள் தோல் மற்றும்
கொழுப்பு நீக்கப்பட்ட
கோழி இறைச்சியைக்
குழம்பு வைத்துச் சாப்பிடலாம்.
மீனை எண்ணெயில் பொரிக்காமல்,
குழம்புவைத்து சேர்த்துக்கொள்ள
லாம். முட்டையின் வெள்ளைக்
கருவை மட்டும் சாப்பிடலாம்.
குழந்தைகள்
குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு,
உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெரியவர்கள் குறைந்தது 30
நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய
வேண்டும்.
நன்றி நண்பரே
ReplyDelete