Sunday, August 31, 2014

2014 செப்டம்பர் மாத நாட்காட்டி

2014 செப்டம்பர் மாத நாட்காட்டி

*05.09.2014-ஆசிரியர் தினம்.

*06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்

* 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு

* 06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு
"எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் -
வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய
அளவில் ஒரு நாள் பயிற்சி.

*10.09.2014 முதல் 12.09.2014 வரை-
உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித
திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில்
வட்டார வளமைய அளவில் மூன்று நாள்
பயிற்சி.

* 17. 09. 2014 முதல் 25.09.2014 வரை உயர்
மேல்நிலைப்பள்ளி 6 முதல் 9 வகுப்பு வரை
உள்ள மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு
நடைபெற உள்ளது.

*22.09.2014-தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு
ஆரம்பம்.

* 27.09.2014-05.10.2014-தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு
முடிவடைந்து மாணவர்களுக்கான
விடுமுறை.

Saturday, August 30, 2014

கலை உலகில் கலைவாணர்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று (ஆகஸ்ட் 30).

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற
எண்ணத்தை உடைத்து நொறுக்கிய
திரையுலகப்போராளி அவர்.

நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள்
வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட
திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்.

டென்னிஸ் பால்
பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள்
நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக
காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்
கலைவாணர். அதையும் தன் முதல்
படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதிலீலாவதி. பூனா சென்ற
பொழுது மதுரம் அவர்களின்
நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த
என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல்
பூத்தது.

முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம்
பொய் சொல்றான் நான் ஒரு பொய்
சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்.

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட
முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட
அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும்
பாணியை அவரே துவங்கி வைத்தார்.

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவர பேசிவிட்டு, ”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள்
சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார்
உங்களுக்கு சேவை செய்வார்கள் ?
அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில்
எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார்
செய்துகொண்டிருந்த விஷயம்
தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம்
துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .

என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில்
சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்..

என்.எஸ்.கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம்
“என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர்
சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளவில்லை...
கலைவாணரை சந்தித்து தன் மகள்
திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார்
கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன்
இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி..

நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில்
என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம்
இது குறித்து கருத்து கேட்டார்கள் .
” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர்
என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க,
இதையே கலைவாணர்
சொன்னா காசு குடுத்துக் கேட்டுக்
கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க.
அந்த வகையிலே என்னைவிட
அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு.

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில்
இறப்பதற்கு முன்னர் கலைவாணர்
கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும்
தனது திருமணம் என்று சொன்ன
தொழிலாளிக்கு தந்துவிட்டு தான்
இறந்து போனார

Friday, August 29, 2014

கிங் ஆஃப் பாப்

"எம்.ஜெ" சிறப்பு பகிர்வு..
"தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40
வருடங்களுக்கு மேல் இந்த
உலகையே கட்டிவைத்திருந்த "மைக்கேல்
ஜாக்சன்" பிறந்த தினம் இன்று."

"நம்ம ஊர்ல துருதுருன்னு இருக்க
பசங்களையோ, கால் ஒரு இடத்துல நிக்காம
ஆடுற பசங்களப் பாத்து எல்லாரும் கேட்குற
ஒரே கேள்வி..இது தான்.."மனசுல என்ன
பெரிய மைக்கேல் ஜாக்சன்னு நினைப்போ?".
இந்த மாதிரி பேச்சுகளைத் கேட்டிராமல் எந்த
ஒரு நடன கலைஞர்களும் தன்னுடைய
லட்சியத்தை அடைந்திருக்க மாட்டார்கள். நடனம்
மீது காதல் கொண்டிருக்கும்
ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இவர் நிச்சயம்
ரோல் மாடலை இருந்திருப்பார்.

பாப் இசைப்
பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர் என
பன்முகம் கொண்டவர்.
'மைக்கேல் ஜோசப் ஜாக்சன்' என்ற இயற்
பெயரை விட "கிங் அஃப் பாப்" (பாப் இசையின்
மன்னர்) என்றும் "எம்.ஜெ" என்றும் உலகில் உள்ள
அனைத்து ரசிகர்களாலும் செல்லமாக
அழைக்கப்பட்டார். தன்னுடைய திறமைக்கு எந்த
அளவு முக்கியத்துவம் தந்தாரோ, அந்த
அளவிற்கு தன்னுடைய தோற்றத்துக்கும்
முக்கியத்துவம் தந்தவர். ஜாக்சன் உடுத்தும்
உடைகளுக்கும்,அவரது தொப்பிக்கும்
ஒரு தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற
பாண்டு இசைக்குழுவில் பணியாற்றினார்.
'அப்பல்லோ' தியேட்டரில் ‘ஜாக்சன் 5’ குழுவின்
முதல் ஆல்பத்தை அந்நாளில் மிகவும்
பிரபலமான 'டயானா ராஸ்' எனும்
பாடகி வெளியிட்டார். பின்னர், டயனா ராஸ்
மைக்கேலுடன் இணைந்து பாட
ஆரம்பித்தார்.இந்த நிகழ்ச்சியே ஜாக்சனின்
இசைப்பயணத்துக்கு திருப்பு முனையாக
அமைந்தது. அதன் பின் ஜாக்சன் உலகப் புகழ்
பெற்ற பாடகராக மாறினார்.
ஒன்பது வயதிலேயே ஜாக்சன் நட்சத்திர
அந்தஸ்தை பெற்றார்.

தன்னுடைய தீவிரமான உழைப்பாலும்,
இசையின் மீது கொண்ட காதலாலும் 80-களில்
புகழின் உச்சியில் இருந்தார். 1982-ல்
வெளிவந்தக் ஜாக்சனின் 'திரில்லர்' அல்பம்
உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட
இசை ஆல்பங்களின் பட்டியலில் முதல் இடத்தில்
இன்று வரை இருக்கிறது.

பாடல் எழுதி,
அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்
போல் நடனம் ஆடுவது,
இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த
'பாப்' புதிய நடனத்தில் அவர் புதிய
புரட்சியே செய்து காட்டினார். ஜாக்சன்
படைத்த 'ரோபாட், மூன்வாக்' போன்ற நடன
வகைகளும் இவரால் பிரபலமானது.

இவரது, நடனத்தாலும் இசையாலும் பல
இசை வகைகள் இந்த
உலகத்தையே ஆடவைத்தது. பல சமூக
சேவைகளுக்கு உலக முழுவதிலும்
கச்சேரிகளை நடத்தி நிதியுதவியும்
செய்துவந்தார். "காட் டு தி தேர், ஆப்
தி வால், திரில்லர், பேட், டேஞ்சரஸ்,
ஹிஸ்டரி" போன்ற இவரது ஆல்பங்கள்
அனைத்தும் உலகம் முழுதும் பெரும்
வரவேற்பை பெற்றன.

"திரில்லர்" இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில்
பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த
உலகத்தையும் ஜாக்சனை திரும்பி பார்க்க
வைத்தது இந்த ஆல்பம். பல
கிராமி விருதுகளையும், அமெரிக்க
இசை விருதுகளையும் வாங்கியுள்ளார்
ஜாக்சன் .கிராமி வாழ்நாள் சாதனையாளர்
விருதும் வாங்கியுள்ளார்.75
கோடி ஆல்பங்கள் விற்றதற்காகவும், 13
கிராமி விருதுகள் பெற்றும்
இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில் இடம்
பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.

‘ப்ளாக் அண்ட் ஒய்ட்’
என்ற விடியோ ஒரே நேரத்தில் 27 தேசங்களில்
ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள்
அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள்.இ
ன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப்
பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும்.

இது அத்தனையும் ஜாக்சனின் சில சாதனைகள்
தான். தன்னுடைய திறமையின்
மீது நம்பிக்கை கொண்டிருக்கும்
ஒவ்வொரு இளைஞனுக்கும் 'மைக்கேல்
ஜாக்சன்' எனும் ஒரு சரித்திரம்
தூண்டுகோளாய் எப்போதும்
அமைந்திருக்கும்.

தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40
வருடங்களுக்கு மேல் இந்த
உலகையே கட்டிவைத்திருந்த "மைக்கேல்
ஜாக்சன்" பிறந்த தினம் இன்று.

Monday, August 25, 2014

கடவுளும் சாத்தானும்

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப்
பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும்
அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.
ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.
ஆசிரியர் : அப்படியெனில்,
சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப்
பார்த்து நான் உங்களை சில கேள்விகள்
கேட்கலாமா? என்கிறான்.
ஆசிரியர் அனுமதிக்கிறார்.
மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும்
இருக்கிறதா?
ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ
குளிரை உணர்ந்தது இல்லையா?
மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில்
தவறு.குளிர் என்ற
ஒன்று இல்லை.அது வெப்பத்தின்
பற்றாக்குறை. சராசரி வெப்பம்
குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.
இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள்
என்ற
ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான்
இருள் என்கிறோம்.
உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம்
அதிகம் படிக்கிறோம்.குளிரையும்
இருளையும் அல்ல.
அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில்
எதுவுமில்லை.
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள
அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.
அந்த மாணவன் வேறு யாருமில்லை.ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன்.
'God Vs Science' புத்தகத்திலிருந்து...

Sunday, August 24, 2014

மின்மினிப்பூச்சி

மின்மினிப் பூச்சிக்கு வெளிச்சம்
எப்படி வருகிறது?

கிராமத்து வயல்காட்டில் அடர் செடிகள்
இரவில் வண்ண ஒளியால் தகதகக்கும். இதில் ஒளிப்பாய்ச்சலுக்கு காரணம் விளக்குப்பூச்சி எனப்படும் மின்மினிப் பூச்சிகளே.

இந்த வெளிச்சம் எப்படி உருவாகிறது.

பொதுவாக ஒரு பொருள் ஒளி விடும்
போது அதிலிருந்து பெரும்பாலும்
வெப்பமே வரும். அதாவது ஒரு மின்
விளக்கில் 90 சதவீத வெப்பமும், 10 சதவீத ஒளி மட்டுமே வரும்.

அப்படி என்றால் இந்த
சிறியப்பூச்சி வெந்து கருகிவிடாதா?

அப்படி எல்லாம் நடப்பது இல்லை.
மின்மினியின் உடலில் உருவாகும்
ஒளி குளிர் ஒளி (கோல்ட் லைட்), உயர்
ஒளி (bioluminescence) என்றே அழைக்கப்படுகிறது.

இதற்கு காரணம் இந்தப் பூச்சிகளின்
வயிற்றில் உள்ள ஒளியைத் தரும்
சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும். சிறிதுகூட வெப்பம் தருவதில்லை.
அதாவது மின்மினியிலிருந்து வரும்
ஒளியில் 100 சதவீத ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே,
மின்மினியின் வயிற்றுப் பகுதியில்
ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளி செல்கள் உள்ளன.
இதில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியின் உடலுக்குள் வரும் காற்றுக்
குழாயிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்
கொள்கிறது. பின் லூசிபெரினும்,
ஆக்சிஜனும் லூசிபெரேஸ் என்ற
நொதியினால் இணைந்து,
ஆக்சிலூசிபெரிலின் என்ற பொருளாக
மாறுகிறது. அப்போதே ஒளியையும்
கக்குகிறது மின்மினியின் வயிற்று செல்கள்.

கைக்குத்தல் அரிசி

தவிடு நீக்காத (கைகுத்தல்)
அரிசியை பயன்படுத்துங்கள்.....

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது.

அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா)
முதலிடம் வகிக்கிறது. அதுபோல்
தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்
அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத
அரிசியில் இரும்புச்சத்து,
சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே,
வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில்
மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம்.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும்
கிடைப்பதில்லை.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும்
வெளியேற்றப்பட்டு விடுகிறது.
இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது.

ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில்
இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்
பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால்
சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர்.
உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில்
தவிடு நீக்கப்படுவது இல்லை.
இவ்வாறு அரிசியை தவிட்டுடன்
சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத்
தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சு என்னும் பழமொழியை நாம்
அறிந்திருப்போம்..

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால்
அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதே இதன் பொருள். ஆனால்
அதை முறியடிக்கும் மருந்தும் அந்த
உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால்
அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால்
அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக
உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில்
கேரளாவிலும், இலங்கையிலும்
மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக
குறைந்துவிட்டது.

முன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக
உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட
மிருதுவாகவும், வெண்மையாகவும்
இருப்பதால் மக்கள் இதையே அதிகம்
விரும்பி உண்கின்றனர்.

முன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா,
கோரைச்சம்பா, குறுஞ்சம்பா,
மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா,
கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா,
வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

புளூட்டோ

ஆகஸ்ட் 24 : 2006 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பு ளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.

கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை:

சூரிய குடும்பத்தில் உள்ள விண்பொருள்
ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்:

அப்பொருள் சூரியனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.
நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
தன் சுற்றுப்பாதைச் சூழலில்
‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.
புளூட்டோவும் அதையொத்த
குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.

பிறந்த நாளின் முக்கியத்துவம்

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம்
உங்களுக்கு தெரியுமா?

ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.
அது ஒரு மகத்தான நாள்.
இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட
நாள்.
தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர்
உணரவேயில்லை.
“நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை
சார்…
வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா?
வேற வேலை இல்லை. பிறந்த
நாளை கொண்டாடுற அளவுக்கு நான்
பெரிய ஆள் இல்லை…”
இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர்
ஒரு சாரார்.
மற்றொரு சாரார்… மேற்கத்திய பாணியில்
மெழுகுவர்த்தி ஏற்றி அதை வாயால்
ஊதி அணைத்து, கேக் வெட்டி,
கிடா வெட்டி, மது விருந்தளித்து இன்னும்
பலப் பல வகைகளில் கொண்டாடுகின்றனர்.
ஆனால் இவர்கள்
அனைவருமே ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர்.
அன்று உண்மையில் அவர்களது பிறந்த நாள்
இல்லை என்பது தான் அது.
நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம்
மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹிந்துக்களின்
பண்டிகைகள் அனைத்தும்
நட்சத்திரத்தை அடிப்படையாக
வைத்தே கணிக்கப்படுகின்றன.
கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம
ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,
முருகனுக்குரிய வைகாசி விசாகம்,
பங்குனி உத்திரம்,
மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ்
மாதங்களின் அடிப்படையில் அந்தந்த
நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான்
கொண்டாடப்படுகிறது.
எனவே நம் பிறந்தநாளையும் தமிழ்
மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த
நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான்
கொண்டாடவேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம்
சுவாதி நட்சத்திரம்
என்று வைத்துக்கொள்வோம்,
என்றைக்கு ஐப்பசி மாதத்தில்
சுவாதி நட்சத்திரம்
என்று வருகிறதோ அன்று தான்
கொண்டாடவேண்டும்.
சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில்
வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள்
கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த
நாளில் கொண்டாடுவது என்ற ஐயம்
உங்களுக்கு ஏற்படலாம்.
18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில்
உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான்
உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும்.
தினசரி காலண்டரில் இது குறித்த விபரம்
இருக்கும்.
பார்த்தால் உங்களுக்கு புரியும்.
(நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின்
அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும்.
ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை.
ஒரு நாளுக்கு 60 நாழிகை).
ஆங்கில தேதிகளை விட, தமிழ் மாதங்களின்
நட்சத்திரங்களின் அடிப்படையில் வரும் பிறந்த
நாளே துல்லியமாக இருக்கும்.
ஏனெனில், பூமி சுற்றும் வேகம் மற்றும்
அது சூரியனை சுற்றி வர எடுத்த்துக்கொள்
ளும் காலமும், 365 நாட்களும் ஒரே சீராக
இருக்காது.
சற்று முன்னர் பின்னர் இருக்கும்.
(அறிவியிலில் இதை ‘ஒழுங்கற்ற ஒழுங்கு’
என்று கூறுகிறார்கள்.) ஆங்கில தேதிகள் அந்த
துல்லியத்தை தருவதில்லை.
ஆனால் வானசாஸ்திரமும் விஞ்ஞானமும்
வளராத அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள்
சூட்சும அறிவைக்
கொண்டு வேதங்களை அடிப்படையாக
வைத்து கணித்த இந்த நாள், நட்சத்திர
கணக்குகள் மேலே கூறிய பூமியின்
சுழற்சி அந்தந்த மாதத்தில் அந்தந்த நாட்களில்
எப்படி இருக்கும் எப்படி வித்தியாசப்படும்
என்பதை கணக்கிட்டே கணித்துள்ளனர்.
எனவே தமிழ் மாதத்தில் உங்கள் பிறந்த
நாளை அந்த நட்சத்திரத்திற்குரிய
நாளன்று கொண்டாடும்
வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.
“இத்தனை வருஷமா என் பிறந்த நாளை ஆங்கில
தேதியை வைத்தே கொண்டாடுகிறேன்.
என் நண்பர்களுக்கும் அது தான் தெரியும்.
இப்போது திடீரென
வழக்கத்தை மாற்றிகொள்வது எப்படி?”
என்று கேட்கலாம்.
நீங்கள் வழக்கமாக ஊரறிய ஆங்கில
தேதிப்படி கொண்டாடும் உங்கள்
பிறந்தநாளை கொண்டாடுங்கள்.
அன்னைக்கு கொஞ்ச சந்தோஷமா இருப்பீங்க.
அதே சமயம் உங்கள் நட்சதிரத்திற்குரிய
நாளன்று நீங்கள் தனிப்பட்ட முறையில்
கோவிலுக்கு செல்வது, நாலு நல்ல
விஷயங்களில்
ஈடுபடுவது என்று கொண்டாடுங்கள்.
அது ஊருக்கு. இது ஆன்மாவுக்கு.
இறைவன் நம்முள் நுழையும் நாள்
பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின்
வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும்...