Friday, August 15, 2014

படித்ததில் பிடித்தது

கேரளா :
‘கடவுளின் சொந்த கிராமம்’
கேரளத்திற்கு இப்படி ஒரு பெருமை.
கடவுளுக்கு உலகில் ஒரு கிராமம்தான்
சொந்தம். ஆனால்
மலையாளிகளுக்கோ உலகமே சொந்தம்.
கேரளத்தில் சுமார் 3.5 கோடி மலையாளிகள்
வசிக்கிறார்கள். ஆனால் அமீரகத்தில்
ஆறரை லட்சம், அமெரிக்காவில் ஏழரை லட்சம்,
சவுதியில் ஆறு லட்சம் இங்கிலாந்தில்
ஒருலட்சம் என உலகின் ஒவ்வொரு நாட்டிலும்
வசிக்கும் மலையாள மக்களின்
எண்ணிக்கையைக் கூட்டினால் அந்தத்
தொகை இன்னொரு கேரளமாக இருக்கும்
யாதும் ஊரே எனத் தமிழன்தான் எழுதினான்
ஆனால் அதை மெய்பித்தவர்கள்
மலையாளிகள்தான் காரணத்தைக்
கண்டு கொள்வது கஷ்டம் இல்லை. ’கடவுளின்
கிராம’த்தில் வேலை வாய்ப்பு குறைவு.
அதற்கு மலையாளிகள் தங்கள்
மாநிலத்தை அழுக்குப்படாமல் வைத்துக்
கொள்ள விரும்புவதும் ஒரு காரணம். பெரிய
தொழிற்சாலைகளுக்கு அவர்கள்
ஆசைப்படுவதில்லை.அதனால்
வேலை வாய்ப்புப் போனாலும்
பரவாயில்லை, வெளியில் போய்
சம்பாதித்துக் கொள்ளலாம்
என்று ஒரு தன்னம்பிக்கை இயற்கையைப்
பேணுவதில் அவர்களுக்கு இணை இல்லை.
கேரளத்தில் எந்த ஆற்றிலும் மணல்
அள்ளக்கூடாது என்று கேரள
அரசு சட்டமே போட்டிருக்கிறது.
அப்படியானால் கட்டிடம் கட்டுவது எப்படி?
இருக்கவே இருக்கிறது தமிழ்நாடு. பணம்
வருகிறதென்றால் பாலாறை பாழாறக்கவும்
நாம் ரெடி
சொந்த மண்ணைக் காப்பதற்காக அயல் மண்ணில்
போய் வியர்வை சிந்துகிற உடலும் மனமும்
அவர்களுக்கு. உலகமயம் என்ற
வார்த்தையை இந்தியா உச்சரிக்கக் கற்கும்
முன்னரே புலம்பெயர்ந்து பிழைப்பவர்கள்
மலையாளிகள் வெயிலடிக்கும்
அரபு நாடுகளில் கட்டிட வேலையும்
செய்வார்கள், காஷ்மீரின் கடுங்குளிரில்
துப்பாக்கியோடு அரணாகவும் நிற்பார்கள்.
மலையாளிகள் உலகின் எந்த மூலையிலும்
எப்படியாவது பிழைத்துக்கொள்கிற
விசித்திர ஜீவிதர்கள்.
எதுவுமே இல்லையா கப்பயும் கஞ்சியுமாக
திருப்தி கொள்வதிலும் அவர்களே டாப்.
என்னதான் உலகம் சுற்றி உழைத்துப்
பிழைத்தாலும் உள்ளூரில் ஒரு ‘செர்ரிய
வீடும் தோட்டமும்’ தான் அவர்களுடைய
கனவு. எங்கு புலம்பெயர்ந்தாலும் அந்த
இடத்திலும் தங்களுக்கென
ஒரு முத்திரையையும், தன்
இனத்தினரை அழைத்து அரவணைத்துப்
பேணுகிற குணத்தையும்
கொண்டிருப்பதுதான் மலையாளிகளின்
அடையாளம்.
’சேட்டா ஸ்ட்ராங்காயிட்டு ஒரு டீ’ என்கிற
குரலை இந்தியாவில்
எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம்
சென்னையில் டீக்கடை வைத்திருக்கிற
சேட்டன்கள்
துணைக்கு ஊரிலிருந்து ஒரு பையனை அழைத்து வருவார்கள்.
அவனுக்கு தொழில் கற்றுத்தருவார். அவன்
வளர வளரத் தனியாக ஒரு கடை வைக்க
உதவுவார்கள்.
சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில்
எல்லா டீக்கடை சேட்டன்களும் இப்படித்தான்
வளர்ந்திருப்பார்கள். ஒரு சேட்டன்
இன்னொரு சேட்டனை கண்டு பொறாமை கொள்வதில்லை.
சொல்லப்போனால் அவருக்கு உதவிகள்
செய்து வளர்க்கவே ஒவ்வொரு மலையாளியும்
விரும்புகிறார்.
தேநீர்க் கடைகளிலிருந்து தேசத்தை ஆள்கிற
பிரதமரின் அலுவலகம் வரை இதுதான்
நிலை.இலக்கியத்தில், விளையாட்டில்,
ராணுவத்தில், எந்தத் துறையை எடுத்துக்
கொண்டாலும் இதைப் பார்க்கலாம்
இன்று இந்தியா முழுக்க மலையாளிகள்
வியாபித்து இருக்கவும் மிக உயரிய
துறைகளின் மிக உயரிய பதவிகளில்
மலையாளிகள் வீற்றிருக்கவும் இதுவும்
ஒரு காரணம்
எந்தச் சூழலிலும் உழைக்கத் தயாராக
இருக்கும். தன்னுடைய
பக்கத்து வீட்டுக்காரனைப் போட்டியாளனாகக்
கருதாமல் கூட்டுகாரனாக பாவிக்கிற
மனநிலை. மலையாளிகளிடமிருந்து நாம்
கற்றுக்கொள்ளவேண்டிய கலை.

No comments:

Post a Comment