இன்றைய நிலவரம்:
இந்த பழமொழியைச்
சொல்லியே உலகில் அதிக நாள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஆமையை ராசி இல்லாத மிருகத்தின்
அடையாளமாகச் சுட்டிக்காட்டிக்
கொண்டிருக்கிறோம்.
நமது முன்னேற்றத்தை அது தடுப்பதாக
பழி சுமத்திக் கொண்டிருக்கிறோம்.
முன்னோர் சொன்னது:
கல்லாமை,உண்மை பேசாமை,பெரியோர்
பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை போன்ற ஆமைகள்
புகுந்தால் அந்த
வீடு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல்
போய்விடும்.எனவே, இந்த
இல்லாமைகள் அகற்றி வாழ்க்கையில்
இன்புற வேண்டும்
ஒரு சிறிய ஆய்வு:
ஆமையின் அதிகப்பட்ச வேகம்
நிமிடத்திற்கு 14 அடி தூரமாகும்.இந்த
வேகத்தில் வரும் ஆமை வீட்டின்
சுற்றுச் சுவரின் முகப்புவாயிலின்
வழியே முற்றம்
கடந்து,திண்ணை தாண்டி, படியில் ஏறி,
வாசலுக்குள் நுழைய எவ்வளவு நேரம்
ஆகும் என்பதை யூகித்துகொள்ளுங
்கள். அவ்வளவு நேரம் ஒரு வீட்டில்
ஆள் நடமாட்டம் இல்லாமலும்,வீட்டில்
உள்ளவர்கள் சோம்பலோடும்,வாசல்
கதவு திறந்தும் கிடந்தால்
அந்தவீடு சிறக்க எந்த
வகையிலாவது வாய்ப்பு உண்டா என்பதையும்
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
நீதி : விலங்குகளின் மேல்
பழி போடாமல் நம்மைத் திருத்திக்
கொண்டாலே நன்மை பிறக்கும்.
No comments:
Post a Comment