1.முதலில் நாம் நம் வாழ்வில் பிளாஸ்டிக் இல்லா உலகம் காண பல வழிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
2. குறிப்பாக கேரி பேக் மற்றும் கப்
பயன்பாட்டினை கண்டிப்பாக தவிர்க்க
வேண்டும்.
3. நமது வீட்டு விசேஷங்களில்
அவைகளை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். பிளாஸ்டிக் பை மற்றும் கப்களுக்கு மாற்று பேப்பர் பை , கப் தான் ஆனாலும் அவைகளை தயாரிக்க எவ்வளவு மரங்களை வெட்ட வேண்டி வரும் என்பதனையும் யோசிப்போம்.
4. கடைகளுக்கு அதுவும்
ஓட்டல்களுக்கு செல்லும்போது துணிப்பைகள் மற்றும் பாத்திரங்கள்
எடுத்துச்செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நாம்
நமது தேவைகளுக்கு எடுத்துச்செல்லும்
போது யார் என்ன சொன்னால் என்ன என்ற எண்ணம் வேண்டும்.
5. நமது கார் / இரண்டு சக்கர வாகனங்களில் எப்போதும்
ஒன்றிரண்டு துணிப்பை இருக்கும்படி
பார்த்துக்கொண்டால் நாம் வெளியில்
சென்று வரும் போது ஏதாவது வாங்கி வர ஏதுவாக இருக்கும்.
6. அரசாங்கம் பிளாஸ்டிக் பை மற்றும் கப்தயாரிப்பினை தடை செய்ய வேண்டும் என நினைக்காமல் நாமே நமது பயன்பாட்டினை
தவிர்த்துக்கொண்டால் தயாரிப்பாளர்
அவரே அவரது தயாரிப்பு விற்பனையாகாமல் தயாரிப்பினை நிறுத்தி விடுவார் அல்லவா ?
இது எவ்வளவு விரைவில்நடக்க வேண்டுமென்பது நமது கைகளில்தான் இருக்கிறது.
7. வீதியில் குப்பையில் எறியாமல்
வீட்டிலேயே சேர்த்து வைத்து அவற்றினை சேகரித்துக்கொள்ள வரும் நபரிடம் கொடுத்து விடலாம். அதற்க்கு அவர் பணமும் கொடுப்பார்.
8. பிளாஸ்டிக் கவர்களை நாம் தெருவில் எறியும் போது அவை பலவழிகளில் நமது சூழலை கெடுக்கிறது. அவை காற்றில்
பறந்து சென்று சாக்கடைகளில்
சேர்ந்து சாக்கடை நீர் செல்வதை தடை செய்கிறது. அதனால் கொசுத்தொல்லை.
காலம் தப்பிய மழை அதுவும் குறைவு . நாம் வீசி எறியும் அடுத்து தப்பித்தவறி நாம் கேரி பை மற்றும் பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்த வேண்டி வருகிறது. அப்போது நாம் செய்ய வேண்டுவது அந்த பைகளை வெளியில் பிளாஸ்டிக் பைகள் நிலங்களில் கிடந்து அப்படி குறைவாக கிடைக்கும் நீரையும் நிலத்தினுள் செல்லாமல் தடுத்து விடுகின்றது. அதனால் தண்ணீர்
பிரச்சினை.
9. ஹோட்டல்களில் நாம்
நமது குழந்தைகளுக்கு வாங்கி வரும் இட்லி , தோசை , பொங்கல் ,
பூரி இப்படி எதுவென்றாலும் ஒரு நியூஸ் பேப்பர் அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட் அதன்
மேல் உணவுப்பொருட்கள் மேலும் சாம்பார் , சட்னி இவற்றினை தனியே ஒரு சில பிளாஸ்டிக் பையில் இவை எல்லவாற்றையும்
ஒரு கேரி பேக்ல் போட்டு கொடுக்கிறார்
கடைகாரர். சுட சுட வரும் தின்பண்டங்கள் , சாம்பார் , குழம்பு இவை அனைத்திலும் நாம் வீட்டிற்க்கு வரும் வரை அந்த பிளாஸ்டிக்
பையின் வேதியியல் மாற்றங்கள் ஏற்படும் அல்லவா? அவை அனைத்தும் தின்பண்டங்களுடன் நமது குழந்தைகளின் வயிற்றில்தானே செல்கிறது. இதை நாம் ஏன்
புரிந்துகொள்ளாமல் ஒரு ஸ்டைல்
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.?
10. குழந்தைகளுக்கு சாக்லேட் , பிஸ்கட்கள் என்றால் பிரியம்தான். அதற்க்கு பதிலாக பழங்கள்
வாங்கிகொடுங்கள் என்கிறோம். மற்ற
பிள்ளைகள் சாப்பிடும் போது நமது பிள்ளைகள் வெறும்
பழங்களை ஒத்துக்கொள்ளுமா ? சரிதான்.
அப்படியெனில் பிஸ்கட்,சாக்லெட்
சாப்பிட்டவுடன் அந்த கவர்களை ,
மேலே சுற்றி வரும் அனைத்து பேப்பர்களை தவறாமல்
குப்பைத்தொட்டியில் போடும்படி செய்தால் நன்றாக இருக்குமே.
11. பெயர் தெரியாமல் வரும்
அனைத்து நோய்களுக்கும் காரணம்
நாமேதான். வேறு யாருமல்ல. நம்மையும் நமது சுற்றுப்புறத்தையும் நாம் சுத்தமாக வைக்காமல் வைத்துக்கொள்ளாமல் இயற்கையாக கிடைக்கும் நிலத்தையும் ,
மழையையும் , காற்றையும் பழி சொன்னால் எப்படி ? வீட்டைச்சுற்றி பிளாஸ்டிக் பைகளை வீசி மழை நாளில் சாக்கடை நீர் தேங்க வைத்து கொசுக்களுக்கு வாழ வசதி செய்து கொடுத்துவிட்டு அவை கடித்து
ஜுரம் என்றால் எப்படி ?
பிளாஸ்டிக்
பொருட்களை மற்றும்
அனைத்து வகை குப்பைகளையும்
எரித்து காற்றினை அசுத்தப்படுத்தி விட்டு அந்த காற்றினை சுவாசிப்பதால் வரும் ஆஸ்த்துமாவிற்க்கு காற்றை காரணம் சொன்னால் எப்படி ?
இப்படி எல்லாவற்றையும் நாம் சிறிதளவேனும் சிந்தித்து நம் வாழ்வில் செயல்பட்டோமானால் ஒரு நல்ல
சுற்றுச்சூழலை நமது வருங்கால
சந்ததியருக்கு வழங்கலாம்.
புத்தாண்டில் ஏதாவது நல்லது செய்ய
வேண்டுமென , எதையாவது தவிர்க்க
வேண்டுமென நினைப்பவர்கள் இந்த பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கலாமே !
No comments:
Post a Comment