சுதந்திர தின சிறப்புப் பக்கங்கள்...
கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
மற்ற மாநில மக்களிடம் இருந்து
நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?
பஞ்சாப்: கற்க வேண்டியது என்ன?
சிரிக்கத் தெரிந்த மனம்
பஞ்சாபியர்களைப் போலத்
துயரங்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட இன்னொரு சமூகம் இந்தியாவில் இல்லை.
மேற்கிலிருந்து வந்த முதல்
படையெடுப்பிற்கே முகம் கொடுத்தவர்கள் அவர்கள்.
உலகையே வெல்ல வேண்டும்என்று ஆசை உந்தித் தள்ள அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது. மண்டியிட மாட்டேன் என அவனுக்கு எதிராகவாளுயுர்த்தி நின்ற போரஸ் பஞ்சாபி.
அந்த
வீரத்தைக் கண்டு வியந்து, போரில் வென்ற போதும், பூமியைத் திரும்பக்
கொடுத்து விட்டுப் புறப்பட்டுப் போனான
அந்த கிரேக்கன்
அடுத்த தாக்குதல்
கிழக்கேயிருந்து வந்தது. சண்டைக்கு வந்தவன் சந்திரகுப்த மௌரியன்.
அப்புறம் மெகலாயர்கள். அப்புறம் ஆங்கிலேயர்கள். எத்தனை ரத்தம்!
அத்தனை ரத்தமும் துச்சம் என
எண்ணியோ என்னவோ ஜெனரல் டயர் சுற்றிச்சுவர்களால் சூழப்பட்ட மைதானத்தில் கவச வண்டிகளை கொண்டு கொத்துக் கொத்தாகச்
சுட்டுத் தள்ளிய ஜாலியன் வாலா பாக்
கோரத்தையும் பஞ்சாப் கண்டது.
அரசியல் சதுரங்கத்தில் வெட்டுண்ட வீரர்கள் அவர்கள். இந்தியா மொத்தமும் சுதந்திரத்தைக்
கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில்,
அவர்கள் அகதிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள்.
வயிற்றைக் கிழித்துக் கொண்டு பிறக்கிற சிசுவைப் போல அவர்களது நிலத்தைக் கீறித்தான் அன்று பாகிஸ்தான் பிறந்தது. கணிசமாக
பஞ்சாபிகள் வாழ்ந்த கராச்சி உள்பட
பெரும்பகுதி பாகிஸ்தானுக்குப்
போயிற்று.
நேற்றுவரை நிலச்சுவான்தாரர்களாக, வியாபாரிகளாகச் செலவத்தில்
திளைத்தவர்கள் ஒருநாளில் ஏழைகள் ஆனார்கள். என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் உறவுகள் கலைந்தன.
அப்புறம் இந்தியா பாகிஸ்தான் யுத்தங்கள்.
பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம்
நுழைந்து ரணகளமான கதை.
அவர்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கேளுங்கள், ஒவ்வொரு குடும்பத்திலும் ரத்தம்சிந்தியவர்கள் இருப்பார்கள்.
ஆனால் அவர்களைப் போல உற்சாகமானவர்களை
இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது.
வாழ்வை வரமென்று கொண்டாடுகிற
உற்சாகம். அந்த உற்சாகம் அவர்களின்
ஒவ்வொரு செயலிலும் ததும்பிக்
கொண்டிருக்கும்.
அவர்கள் உடைகளில், அவர்கள்
இசையில், அவர்கள் நடனத்தில், ஏன் உரத்துப் பேசுகிற அவர்கள் குரலில் கூட. தேசம் முழுக்க அவர்களைப் பற்றிச் சொல்கிற ஜோக்குகளைக் கேட்டு கூரை அதிரச்சிரிக்கிறவர்கள் அவர்கள்தான்.
போஜனப் பிரியர்கள். கேளிக்கையின் குழந்தைகள். விருந்துகளில்- அளிப்பதிலும் க லந்து கொள்வதிலும்- விரும்பிப்பங்கேற்பவர்கள்.
அந்த மாலை இன்னும் நினைவிருக்கிறது.
மறுநாள் தென்னாப்பிரிக்கா புறப்பட
வேண்டும். இன்று அந்த தூதரகத்தில் பார்ட்டி. தவிர்த்து விடலாமா எனத் தயங்கித் தயங்கிப் பின் தாமதமாகப் புறப்பட்டேன்.
நான் பயணித்த டாக்சியை ஓட்டியவர் ஒரு சர்தார்ஜி. 80 வயதிருக்கும். முதுமையின் களைப்பை முகத்தில் காணவில்லை.
“உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று ஆரம்பித்தேன். இரண்டு மகன்கள் ஒருவன் இராணுவத்தில். இன்னொருவன் லண்டனில்.
மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டேன்.
மாப்பிள்ளை லூதியானாவில்
பட்டறை வைத்திருக்கிறான்”
“பின் ஏன் நீங்கள் இந்த வயதில் தில்லியில் டாக்சி ஓட்டிக்
கொண்டிருக்கிறீர்கள்?”
சர்தார் என்னைத் திரும்பிப் பார்த்தார்.
“என்ன தப்பு? ஓ!இந்தக் கிழவன் இருட்டில் இழுத்துக்
கொண்டுபோய் எங்கேயாவது முட்டிவிடுவான் என மிரள்கிறீர்களா? இராணுவத்தில்
வண்டியோட்டியிருக்கிறேன், சாப்!.
கரடு முரடான மலைகளில் ஓட்டியிருக்கிறேன். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் கிடைத்த காசில் வண்டி வாங்கினேன். உடலில்
தெம்பிருக்கிறவரை ஓட்டுவேன், பென்ஷன் வருகிறது.
சாப்பாட்டிற்கு பிரச்சினை இல்லை.
ஆனாலும் ஒன்றும் செய்யாமல்
உட்கார்ந்து சாப்பிட மனசு இல்லை.
நமக்கு நாம்தான் சார் பொறுப்பு.
அதை அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பது தப்பு” அவர் வார்த்தைகளை யோசிக்க
ஆரம்பித்து அதிலேயே மூழ்கிப் போனேன்.
இறங்க வேண்டிய இடம் வந்ததைக்
கவனிக்கவில்லை. அப்போது தோளில்
தட்டி சர்தார் சொன்னார். “பார்ட்டிக்குப் போற,. சந்தோஷமா போ!. துக்கம் மகிழ்ச்சி இரண்டும் கொண்டது உலகம். துக்கத்தை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மிச்சம் இருப்பது மகிழ்ச்சிதான். போசாப்! என்ஜாய்!”
துயரங்களுக்கு நடுவிலும் வாழ்க்கையைக் கொண்டாடுவது எப்படி என்பதை வரம் வாங்கி வந்துள்ள பஞ்சாபிகளிடம்தான் கற்றுக்
கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment