Sunday, August 3, 2014

வினோத வழக்கு


மார்ச் 23, 1994......ரொனால்டு
உடலை பிரேத பரிசோதனை செய்த
டாக்டர் தனது ரிப்போர்ட்டில்
இறப்பிற்கான காரணம் அவன் தலையில்
பாய்ந்திருந்த தோட்டா என
எழுதியிருந்தார்........

ஆனால் ரொனால்டு
தற்கொலை செய்து கொள்ள
10வது மாடியிலிருந்து தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துவிட்டு குதித்திருந்தான்...

அவன்
விழும்போது 9வது மாடியிலிருந்து சீறிப்பாய்ந்த
தோட்டா அவனை தரை தொடும்
முன்பே சாகடித்து விட்டது.

சுட்டவனுக்கோ செத்தவனுக்கோ 8வது மாடியில்
பாதுகாப்புக்காக கட்டி வைத்திருந்த
வலை பற்றி தெரியாது.

எனவே ரொனால்டு முடிவெடுத்தபடி அவன்
குதித்து தன்
தற்கொலையை நிறைவேற்றியிருக்க முடியாது.

வலை அவனை காப்பாற்றியிருந்திருக்கும்.

ரொனால்டை கொன்ற
குண்டு 9வது மாடியின்
ஒரு போர்ஷனிலிருந்து
சுடப்பட்டிருந்தது.

அந்த போர்ஷனில்
ஒரு வயதான தம்பதியினர்
வாழ்ந்து வந்தனர்.

வாய்த்தகராறு முற்றி கணவன் தன்
மனைவியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி சுட்டு விடப்
போவதாக மிரட்டிக்
கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில்
கணவன்
மனைவியை நோக்கி துப்பாக்கி விசையை அழுத்த
குறி தப்பி ஜன்னல் வழியாக
வெளியேறி 10வது மாடியிலிருந்து விழுந்து கொண்டிருந்த ரொனால்டைக் கொன்றது.

ஒருவன் 'ஏ' வைக் கொல்ல
உத்தேசித்து, தவறி 'பி' யைக்
கொன்றால் அவன் மீது 'பி' யைக்
கொன்ற குற்றம் நிரூபணமாகும்.

ஆனால் அந்த வயதான
தம்பதியரோ தங்களுக்கு துப்பாக்கியில்
தோட்டா இருந்ததே தெரியாது என்று வாதிட்டனர்.

அந்தப் பெரியவர் ரொம்ப
காலமாகவே சண்டை போடும்போதெல்லாம் துப்பாக்கியை நீட்டி மனைவியைக்
கொன்று விடுவதாக
மிரட்டுவதை தன்
வாடிக்கையாகவே
வைத்திருந்ததாகவும் ஒரு நாளும் அவளைக் கொல்லும்
எண்ணம்
தனக்கு இருந்ததில்லை என்றும்
கூறினார்.

ஆகவே     ரொனால்டின் மரணம்
ஒரு விபத்து.......

துப்பாக்கி யதேச்சையாக லோட்
செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து நடந்த விசாரணையின்
போது ஒரு சாட்சி அந்த
துப்பாக்கியில் குண்டுகளைப்
போட்டது அந்த தம்பதியரின்
மகன் தான் என்றும் இந்த விபத்து நடப்பதற்கு ஒரு 6
வாரங்களுக்கு முன் அவன்
துப்பாக்கியில்
தோட்டாக்களை நிரப்பியதைப்
பார்த்ததாகவும் சொன்னான்.

மேற்கொண்டு நடந்த விசாரணையில்
அந்த வயதான அம்மா தன்
மகனுக்கு கொடுத்து வந்த பண
உதவியை நிறுத்தியதாகவும்
அதனால் ஆத்திரமடைந்த மகன்,
எப்போதும் துப்பாக்கியைக்
காட்டி மிரட்டும் தன் அப்பா ஒரு நாள்
அம்மாவை சுட்டு விடுவாரென்று நம்பி துப்பாக்கியில்
குண்டுகளை நிரப்பியிருக்கிறான்.

ஆகவே துப்பாக்கியின்
விசையை அவன்
இழுக்கவில்லையென்றாலும்
துப்பாக்கியை கொலை செய்யும்
எண்ணத்தில் லோட் செய்திருந்ததால்
மகன் தான் கொலை குற்றவாளி.

ஆகவே ரொனால்டின்
மரணத்திற்கு காரணம் அந்த
தம்பதியினரின் மகன் தான்
என்று தெள்ளத்தெளிவாக
நிரூபணமானது.

இப்போது தான் கதையின் முக்கிய
திருப்பம்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த
மகன் தான் ரொனால்டு
என்பது தெரிய வந்தது.

தன் தாயைக்
கொல்லத் துடித்த அவன்
அது முடியாமல் போகவும்
ஏற்கனவே பண நெருக்கடியில்
இருந்தவன் மனம்
வெறுத்து 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய
முடிவெடுத்தான்.

குதிக்கும்போது 9வது மாடியிலிருந்து வெடித்த
துப்பாக்கியின்
தோட்டா பாய்ந்து இறந்தான்.

எனவே அவர்களது மகன்
தன்னையே கொலை செய்து விட்டான்....

பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான
காரணம்
தற்கொலை என்று திருத்தி எழுதினர்.

No comments:

Post a Comment