தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில்
நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம்
ஆரோக்கியமாக இருக்கலாம்
என்பது பழங்காலமாக இந்தியாவில்
நிலவி வரும் நம்பிக்கையாகும்.
பானை அல்லது குடம்
வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல்
நல பயன்களை பெறுவதற்கு பலரும்
தண்ணீரை தாமிர கோப்பையில்
நிரப்பி பருகுகின்றனர்.
ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும்
உள்ளதா என்று பார்ப்போம்.
இந்திய பண்பாட்டின் படி, தாமிர
பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும்.
ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கபம். பித்தம்.
மற்றும் வாதம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.
அதனால் தாமிர பானையில்
இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள்
உடலில் உள்ள இந்த தோஷங்கள்
சமநிலையுடன் பராமரிக்கப்படும்.
அறிவியலின் பார்வையில், தாமிரம்
என்பது உடலுக்கு தேவையான
தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர்
மக்கி போகாமல் இருக்க தாமிரம்
ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும்.
அதனால் தாமிர பாத்திரத்தில்
வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில்
நற்பதத்துடன் விளங்கும்.
தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள
தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும்
பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:
தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்
தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம்.
முக்கியமாக வயிற்று போக்கினால்
உண்டாகும் ஈ-கோலி போன்ற
பாக்டீரியாக்களுக்கு எதிராக
இது சிறப்பாக செயல்படும்.
அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர்
இயற்கையாகவே சுத்தமானவையாக
இருக்கும்.
தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது.
பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நலக பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
கீல்வாத வலியை குணப்படுத்தும்
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள்
அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது.
கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
புண்களை வேகமாக குணப்படுத்தும்
புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள்
தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்
மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம்
உதவுகிறது.
இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்
வயிற்றை மெதுவாக
சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும்
அறிய குணத்தை தாமிரம்
கொண்டுள்ளது. இதனால் செரிமானம்
சிறப்பாக நடைபெறும். அதனால் தான்
தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான
அமைப்பை பெற்றிடலாம்.
இரத்த சோகையை எதிர்க்கும்
நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின்
உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம்
உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க
இரும்பு மிக முக்கியமான
கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய
அளவில் தேவைப்படும்.
கர்ப்ப காலத்தின் போது:
கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள்
குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய்
எதிர்ப்பு சக்தி விசேஷ
சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப
காலத்தில் தாமிர பானையில் உள்ள
தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள்
மற்றும் நோய்வாய் படாமல்
பாதுகாப்போடு இருக்கலாம்.
புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்
தாமிரத்தில் சிறப்பான
ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது.
அதனால் தான் புற்றுநோய் அணுக்கள்
வளர விடாமல் அது பாதுகாக்கிறது.
மேலும் இயக்க உறுப்புகளால் உடலில்
ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய
இது உதவும்.
வயதாகும் செயல்முறை குறையும்
தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்
குணங்கள், சருமத்தில் ஏற்படும்
சுருக்கங்கள் மற்றும்
திட்டுகளை சிறப்பாக கையாளும்.
கூடுதல் அளவிலான தாமிரத்தால்,
உங்கள் சருமம் மற்றும்
முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம்
கிடைக்கும்.
No comments:
Post a Comment